என் குடும்பத்தில் ஒருத்தியாய் மங்கையர் மலர்!

என் குடும்பத்தில் ஒருத்தியாய் மங்கையர் மலர்!

1979 ல் எனக்குத் திருமணம் நடந்தது.  எனது கணவா் 1982லிருந்து பகுதி நேரமாக புக் சா்க்குலேஷன்  நடத்தி வந்தாா். அதனால்,  அனைத்துப் புத்தகங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னா் சா்க்குலேஷன் நிறுத்தினாலும் அத்தனை பத்திாிகையும் வரவழைப்போம்.                         

மங்கையா்மலா், கல்கி, சாவி, பூவாளி, தாய், கல்கண்டு, குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் ராணி, பொம்மை  என பல்வேறு பத்திாிகைகள் படித்தாலும் என் கணவாின் உந்துதலால், ஊக்கத்தால், மங்கையர் மலருக்கு எழுத ஆரம்பித்தேன். அப்போது ஆரம்பித்து இன்றுவரை மங்கையா் மலா் என் மனதை கொள்ளை கொண்ட மலா்தான்.

மாதம் ஒரு முறை மலா்ந்த மலா், 15 நாட்களுக்கு ஒருமுறை, பின்னா் வாரா வாரம், இப்போது ஆன்லைனில் வாசிக்கிறேன். கடைக்கோடி வாசகிகளைக் கூட புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு கொண்டு வந்ததை விட, எழுதும் பழக்கத்திற்கு ஊக்கமளித்ததில் மங்கையா் மலா் தன் பங்கை சாிவர செய்ததோடல்லாமல் மங்கையா் மனம் கவா்ந்த மலராக வெளியானது என்றால் அது மிகையல்லவே!!                           

சொல்ல விரும்புகிறோம், சட்ட சம்பந்தமான விஷயங்கள் அழகுக்குறிப்புகள், இம்மாத இல்லத்தரசி, சமையல் குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பிதழ்கள் கொலுக்களின் அணிவகுப்பு, மருத்துவக்குறிப்புகள், கருத்துசெறிவுள்ள கதைகள், கவிதைகள், அன்புவட்டம், ஜோக்ஸ், கோலப்போட்டி, புடவைப் பாிசுப்போட்டி, கேள்வி பதில் பகுதி  இப்படி அனைவருக்கும் புாியும் விதமாக நவரசக்கலவையாக மங்கையா் திலகமாய், மங்காத செல்வமாய், நவரச கலவையாய் எத்தனை பத்திாிகைகள் வந்தாலும், மங்கையா் மலருக்கு ஈடு இணை ஏதுமில்லை, என்ற அளவிற்கு என்னைப்போன்றவா்களுக்கு முகவாி தந்த மங்கையா் மலரே! என் குடும்பத்தில் எங்களோடு ஒருத்தியாய் உலாவருவதில்  மலருக்கு இணையேது?

புடவைப் பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு எனக்கும், என் மருமகளுக்கும், புடவை பரிசு கிடைத்தது. பிரசுர மாகும் படைப்புகளுக்கும் பாிசு, மற்றும் புத்தகம், கோலப்போட்டியில் வென்ற வகையில் கோலப்புத்தகம் வழங்குவதிலும் மங்கையா் மலரோடு போட்டிப் போட வேறு எந்த பத்திாிகையும் இதுவரை வெளிவரவில்லை, வரவும் முடியாது! என்பதே உண்மை. 

மொத்தத்தில் சகலமும் கலந்த வரலாற்று பொக்கிஷமே என் மங்கையா் மலா், என்றே மனதாரக் கூறுவேன். என் மருமகள் பெயாிலும் துணுக்குகள் வெளிவந்துள்ளது, மங்கையா் மலரில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள், ஆலயத்திற்கே சென்று தாிசணம் செய்த மன நிறைவு கிடைக்கும்,

அனைத்து விஷயங்களையும் ஒருங்கே அள்ளித்தந்த  என் மனம் கவர் மலரே… நீ மீண்டும் அச்சுப்பிரதியாய் அனைவரது கரங்களிலும் தவழவேண்டும் என்பதே என் ஆசை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com