நாற்பது வயதுக்கு மேல் ஆனவரா?  அப்ப இதை முழுசா படிங்க...!

நாற்பது வயதுக்கு மேல் ஆனவரா? அப்ப இதை முழுசா படிங்க...!

நாற்பதுக்கு மேல் வாழ்க்கை மீதான பயமே மன அழுத்தமாகி மன உளைச்சலாகி பல நோய்களை வர காரணமாகி விடும். மன அழுத்தத்தால் உடல் எடை, நீரிழிவு நோய் போன்ற நோய்கள் எட்டிப் பார்க்கும். இவற்றை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளாவிட்டால் இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகும்.

தனக்கு யாருமில்லை, தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என்ற மனநிலையை தாங்களே உண்டாக்கி கொண்டு மன உளைச்சலை வரவைத்துக் கொள்வர். இது ப்ரீ மெனோபாஸ் கால கட்டமாகவும் இருக்கலாம். அதற்கு இப்போதே மனதை தயார் நிலையில் வைத்த கொள்ளலாம்.

இந்த காலங்களில், உடல் கொதிப்பு, இரவில் வியர்வை, எரிச்சல், அரிப்பு, சிறுநீரை அடக்கி வைக்கமுடியாமை, நினைவாற்றல் குறைதல், கவனக்குறைவு முதலிய வலிகள் தோன்றுகின்றன.

மனதை எப்படி ஆரோக்கியமாக வைப்பது?

சுற்றுச் சூழல் காரணிகள், பயணம் மன நிலைகள் போன்றவை இளம்வயதினரைவிட வயது முதிர்ச்சியடையும் நிலையில் உள்ள பெண்களுக்கு அதிகபாதிப்பை ஏற்படுத்தும்.

நடைப்பயிற்சி முறையான யோகா, சரிவிகித உணவு போன்றவை உடலையும்உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

வயதான காலத்தில் எதற்கு விலை அதிகம் கொடுத்து துணி வாங்க வேண்டும் என்றஅலட்சியம் தலை தூக்கும்.

எப்போதுமே ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கு ஏற்ப உடுத்துகிற உடையில்கவனம் தேவை.

பொருத்தமான அழகான உடை உடுத்தி கௌரவமாக, அழகாக இருந்தால்போகுமிடத்தில் எல்லாம் நமக்கு தனி மரியாதையை நாம் உடுத்தும் ஆடைகளேபெற்றுத் தரும்.

மேலும் ஒருவரின் உடைகளே அவருக்கு மனவலிமையும், தன்னம்பிக்கையும்உண்டாக்கும் என்பது உளவியல் கருத்து.

அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை,விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறிமாறி வரும்.

முகத்தை எந்த நேரமும் சிடு சிடு என்று வைத்துக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் இருந்தால் முகம் பொலிவோடு விளங்கும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் மனதை சந்தோஷமாக வைத்துகொண்டால் முக பொலிவு தானாகவே வந்துவிடும்.

காபி தேநீர் குடிப்பதை தவிர்த்து விட வேண்டும். காற்றோட்டமான இடங்களில்வாழ்வதுடன் இரவில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது.

உடல் எடை கூடினால், தோற்றத்தில் முதுமை தெரியும் வீட்டிலேயே செய்யக்கூடியசில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தாலே போதும்.

உணவு உடற்பயிற்சி, தெளிந்த மனம் இந்த மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம்கொடுத்து வாழ்க்கை முறையை மாற்றி மனம், உடல் இரண்டையும்புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டால், எப்போதும் இளமையுடன் ஆரோக்கியவாழ்வும் வாழலாம். இயல்பாக இருப்பதே சந்தோஷமான தாம்பத்தியத்திற்கான வழிமுறைகள்.

எனவே இந்த காலகட்டத்தில் இருக்கும் பெண்களை கணவனும், குழந்தைகளும்கூடுதல் அரவணைப்புடன் நடத்த வேண்டும்.

தன்னால் யாருக்கும் உபயோகமில்லை என்ற மன அழுத்தத்தின் காரணமாகஅவர்கள் எல்லோர் மீதும் எரிச்சலடைவார்கள், கோபப்படுவார்கள்.

இதனை வீட்டில் இருப்பவர்கள் புரிந்துகொண்டு எல்லாவற்றிலும் அவர்களின்முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களின் மனதை அமைதிப்படுத்த வேண்டும், எல்லாவற்றையும் அவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

முக்கியமாக கணவன் கூடுதல் அக்கறையுடனும், அன்புடனும் நடந்து கொண்டால் இவர்களின் மனநிலை தெளிவு பெறும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com