கத்தரிக்காய் செடிகளை நன்றாக பராமரிக்க..!

கத்தரிக்காய் செடி
கத்தரிக்காய் செடி

1.மாடித் தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டத்தில் வருடத்தின் அனைத்து மாதங்களும் கத்தரிக்காய் செடிகளை பயிரிடலாம். டிசம்பர் ஜனவரி முதல் மே மாதம் வரை எப்போது பயிரிட்டாலும் கத்தரிக்காய் செடி நன்றாக வளர்ந்து பலன் தரும்.

2. ஆடிப்பட்டத்தில் தான் கத்தரிக்காய் செடிகள் அதிக காய்களை கொடுக்கிறது. எனவே கத்திரிக்காய் செடிகளை ஆடிப்பட்டத்தில் பயிரிடுவது சாலச் சிறந்தது.

3. கோடைகாலத்தில் கத்திரிக்காய் செடிகளை பயிரிடுவதை தவிர்ப்பது நல்லது. கோடைகாலத்தில் மாவுப் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.

4. செடியில் கத்தரிக்காய்கள் சிறிய வடிவத்திலேயே வரும். ஏனென்றால் மழைக்காலத்தில் கத்தரிக்காய் செடிகளுக்குத் தேவையான ஊட்டசத்துக்கள் மழை நீரிலேயே இருக்கும்.

5. கோடைகாலத்தில் மழைநீர் கத்திரிக்காய் செடிகளுக்கு கிடைக்காமல் போவதால் கத்திரிக் காய்கள் சிறிய வடிவிலேயே காய்க்கின்றன.

6. கோடைகாலத்தில் கத்தரிக்காய்கள் கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். இது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் வருவதுதான். அதற்கு சாம்பல் அல்லது வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு கொடுப்பதினால் பொட்டாசியம் சத்து குறைபாடு நீங்கும்.

கத்தரிக்காய்
கத்தரிக்காய்

7. கோடை காலத்தை தவிர்த்து மீதி உள்ள காலங்களில் கத்திரிக்காய் செடிகளை பயிரிடுவது சிறந்தது.

8. கத்தரிக்காய் செடிக்கு மண் கலவை செய்யும்போது வண்டல்மண்,

களிமண் கலந்த வண்டல் மண், செம்மண் சிறந்தது.

9. கத்தரிச்செடியில் முப்பது முதல் நாற்பது நாட்களில் பக்கக் கிளைகள் வரும்போது, தண்டு துளைப்பான், கம்பளி பூச்சி தொல்லைகள் இருக்கும். அப்பொழுது வேப்ப எண்ணெயுடன், இயற்கை சோப்பு கரைசல் கலந்து தெளிக்கவேண்டும். வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் தவறாமல் தெளித்து வருவது சிறந்த பலனை தரும்.

10. அசுஉனி, இலைப்பேன், மாவுப்பூச்சிகள் தொல்லைகள் இருக்கும். இதற்கு இஞ்சி, பூண்டு, மிளகாய், கரைசல் மிகவும் நல்லது. அசுஉனி பூச்சிகளுக்கு, சாம்பல் இலைகளின் மீது காலைவேளைகளில் தூவி விடலாம்., அல்லது சாம்பல் கரைசலையும் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com