பல்வேறு வடிவங்களில் கோயில்கள், கருவறைகள்!

பல்வேறு வடிவங்களில் கோயில்கள், கருவறைகள்!

* கேரள மாநிலம் திருச்சூர் வடக்கு நாத சுவாமி கோயில் கருவறை, வட்ட வடிவமாக உள்ளது. இங்கு மற்ற சன்னிதிகளும் மற்ற வடிவமாகவே இருக்கின்றது.

* திருக்கடையூர் அருகே உள்ள திருவிடைக்கழி முருகன் கோயில் சிவாலய வடிவில் அமைந்துள்ளது.

* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கருவறை முக்கோண வடிவில் உள்ளது. இதற்கு மூன்றரை சுற்று பிரகாரம்தான்.

* திருப்பத்தூர் ஜெகன் பாறை என்ற ஊரில் முருகன் கோவில் சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய சிவலிங்கத்தின் உள்ளே முருகன், வள்ளி தெய்வானையுடன் தரிசனம் தருகிறார்.

* கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயில் கருவறை, தேர்வடிவில் நான்கு சக்கரங்களுடன் கூடிய தேர் போல, கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள சின்ன காவலன் என்னும் சிவன் கோவிலில் இரண்டு கருவறையில் உள்ளன ராஜகோபுரத்தின் நேர் எதிரே உள்ள அஷ்டோத்திரவல்லி ஈஸ்வரர் மூலஸ்தானம் ஒன்று, அதன் பின்புறம் உள்ள நூற்றெட்டீஸ்வரர் மூலஸ்தானம் மற்றொன்று.

* திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் சங்கு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

* திருச்சி அருகே உள்ள திரு நெடுங்குளம் கோவில் கருவறை என் கோண வடிவில் உள்ளது.

* கம்போடியாவில் அங்கோர்வாட் என்ற இடத்தில் உள்ள விஷ்ணு கோயில், தாமரைப்பூ வடிவத்தில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com