கையில் தந்தியுடன் கிரவுண்டில் நுழைவது அந்தக் காலம்!

கையில் தந்தியுடன் கிரவுண்டில் நுழைவது அந்தக் காலம்!

அன்றைய டெஸ்ட், மற்றும் மற்ற மேட்சுகளில் பெருந்தன்மையுடன் ஆட்டக்காரர்கள் பாராட்டுவதை சர்வசாதாரணமாக காணலாம்.

எதிரணி பேட்ஸ்மேன் நன்றாக விளையாடி பவுண்டரியோ, சிக்ஸரோ அடித்தால் பவுலிங் செய்யும் அணியினர் உடனடியாக கைதட்டி மனதார பாராட்டுவார்கள். குறிப்பாக பந்து வீசியவர்.

அதே போல நல்ல பந்து வீசினால், பேட்ஸ்மேன் உடனே பந்து வீசியவரை புகழ்ந்து பாராட்டுவார். 

எதிரணி பேட்ஸ்மேன் சதம் எடுத்தால், மைதானத்தில் இருக்கும் எதிரணி வீரர்கள் கைகளை தட்டி பாராட்டுவார்கள். முதுகில் தட்டுவார்கள்.

பவுலர் விக்கெட்டை வீற்றினால் கைதட்டல்கள், முதுகை தட்டுவது, கை குலுக்குவது இந்தவகைகளில் பாராட்டுதல்கள் வெளிப்படுத்தப்படும்.

வேறு வகையில் ஆன, கட்டிக் கொண்டு குதிப்பது, ஆக்ரோஷமாக கத்துவது, நடனம் ஆடுவது, குதிப்பது, ஓடுவது போன்றவை அந்தக்காலத்தில் மிஸ்ஸிங்.

இங்கிலாந்து மண்ணில் ஒரு கிரிக்கெட் மேட்ச் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தீடிரென்று தந்தி பட்டுவாடா செய்யும் ஊழியர் வந்தார், கையில் கத்தை தந்திகளுடன்.

வந்த தந்திக்கு உரியவர் அந்த சமயம் மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். தந்தி சேவகர் விறு விறுவென்று பிட்சை நோக்கி நடந்தார். மேட்ச் நிறுத்தப்பட்டது. பேட்டிங் செய்துக் கொண்டிருந்தவர், தந்தியைப் பெற்றுக் கொண்டார். 

தந்தியை பிரித்துப் படித்து புரிந்துகொண்டார். ஆட்டம் தொடர்ந்தது. தந்தி, ஆட்டக்காரருடைய அணி கேப்டனிடமிருந்து.

தந்தியில் எப்படி ஆட வேண்டும் அன்றைய மேட்சை பற்றிய ஆலோசனைகள் கட்டளைகள், குறிப்பிட்டு இருந்தன.

வேறு ஒரு காட்சி. வேறு ஒரு மேட்சில். 

டீ டைம் (தேனீர் இடைவேளை). 

மற்ற மேட்சுகள் போல ஆட்டக்காரர்கள், நடுவர்கள் பெவிலியன் நோக்கி நகரவில்லை.

பவுண்டரி எல்லைக்கு அருகில் கைகளில் ட்ரேகள் மீது ஆவி பறக்கும் தேநீர், பால், பிஸ்கெட்டுகள் போன்றவைகளை வைத்து இருந்த இளம் மங்கையர்கள் மைதானம் நோக்கி நடந்தனர்.

அங்கு இருந்த நடுவர்கள், ஆட்டக்காரர்கள் தேநீர் அருந்தினர்.

மேற்கூறிய இரண்டு நிகழ்வுகள் போன்றவை அந்த காலத்திய கிரிக்கெட் மேட்சுகளில் நடைப் பெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com