முருங்கைக் கீரை பொரியல்

முருங்கைக் கீரை பொரியல்

ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்,

தேவை:

முருங்கைக் கீரை (ஆய்ந்தது) – 2 கப்,

துவரம் பருப்பு – 80 கிராம்,

தேங்காய் துருவல் அரை கப்,

உப்பு தேவைக்கேற்ப,

எண்ணெய் – 3 டீஸ்பூன்,

கடுகு அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை – 1 இணுக்கு,

சீரகம் கால் டீஸ்பூன்,

சிவப்பு மிளகாய் – 3,

பெரிய வெங்காயம் (பொடிசா நறுக்கிடவும்) – 1

செய்முறை:
துவரம் பருப்பை குக்கரில் குழைந்துவிடாமல் 80% வேகவைத்து எடுக்கவும். கீரையை தண்ணீரில் போட்டு கழுவி எடுக்கவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடானதும் கடுகு, . பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் கீரை சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். உப்பு போடவும். மிதமான தீயில் வேகவிடவும். தண்ணீர் வற்றி கீரை வெந்ததும், வேக வைத்த துவரம் பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். மோர் குழம்பு சாதம், சாம்பார் சாதம் கூட சேர்த்து சாப்பிட சுவையானது. சத்து மிகுந்தது.

அலைபேசி 9884573833.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com