நாடாளுமன்றக் கூட்டத் தொடர்: எதிர்க்கட்சிகள் அமளியால் இரு சபைகளும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்: எதிர்க்கட்சிகள் அமளியால்  இரு சபைகளும் ஒத்திவைப்பு!

டெல்லியில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்றுத் தொடங்கப்பட்ட நிலையில், எதிர்கட்சிகளின் அமளியால் பார்லி 2-வது நாளாக இன்றும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்றுத் துவங்கிய நாடாளுமன்றக் குளிகாலக் கூட்டத்தொடரில், அவை துவங்கியதும், வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அதனைத் குரல் ஓட்டெடுப்பின் மூலம் மசோதா ரத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்கட்சியினர் கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளூம் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தின்போது பெண் காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த 12 எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் திரும்ப பெற வேண்டும் என இன்றைய நாடாளுமன்ரக் கூட்டத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். ஆனால் இதனை ஏற்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அமளி நிலவியதால் இன்று இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து அவையிலிருந்து வெளியேறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com