22 இஞ்ச் வித்தியாசம்... அதுக்குன்னு இப்படியா கேள்வி கேட்பது? இணையத்தை கலக்கும் காதல் ஜோடி!

22 இஞ்ச் வித்தியாசம்... அதுக்குன்னு இப்படியா கேள்வி கேட்பது? இணையத்தை கலக்கும் காதல் ஜோடி!

ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள்தான் Brooke Dostillio, Dylan Painter என்ற காதல் ஜோடி. உலகில் எத்தனையோ காதல் ஜோடிகள் இருந்தாலும், இந்த ஜோடியைப் பார்ப்பவர்கள் அவர்களிடத்தில் ஒரு கேள்வியை மட்டும் கேட்டு விடுகிறார்களாம்.

இந்த காதல் ஜோடியைப் பொறுத்தவரை பார்ப்பதற்கு அழகாகவே இருக்கின்றனர். இருந்தாலும் இவர்களின் உடல்தோற்றம் சற்று நம்மை வித்தியாசமான ஜோடியாக பார்க்க வைத்துவிடுகிறது.

காதலனோ உயரம் 6 அடி 10 இன்ச் உடைய வாட்டசாட்டமான உருவம். காதலி அழகான தோற்றத்தில் ஆனால் சற்றே உயரம் குறைவாக காணப்படுகிறார். இருவருக்கும் உயரத்தில் 22 இன்ச் வித்தியாசம்.

இருவரையும் தனித்தனியாக பார்க்கும்போது, Dylan Painter சராசரி உயரத்தை விட சற்று உயரமாகவும், Brooke Dostillio சராசரி உயரத்தைவிட சற்று குறைவாகவும் தோற்றமளிக்கின்றனர். ஆனால் இருவரையும் அருகில் வைத்து பார்க்கும்போதுதான் பார்ப்பவர்களுக்கு சற்று பிரமிப்பும், ஆச்சரியமும் ஏற்படுகிறது.

டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் இவர்கள் தங்கள் உறவு குறித்துகூட அதில் வெளியிடுவது உண்டு. இந்நிலையில், சிலர் நேரில் கேட்க முடியாத அந்தக் கேள்விகளைக்கூட சமூக வலைதளங்களில் கேட்டு விடுகிறார்களாம்.

அது என்னவென்றால், உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் இந்த 22 இன்ச் உயர வித்தியாசம், உங்கள் அந்தரங்க உறவை பாதிக்கிறதா? என்ற கேள்விதானாம்.

இதற்கு பதிலளித்த Brooke Dostillio, நான் மிகவும் குட்டையாக இருப்பதாலும், Dylan Painter உயரமாக இருப்பதாலும், இதுபோன்ற கேள்விகளை பலரும் கேட்கிறார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இது எங்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூலாக கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com