முதலீட்டுத் திட்டங்களை விரிவுபடுத்தும் அமேசான்.. ஆவலுடன் சிறுவணிகர்கள்..!

Amazon
AmazonImage Credits: Business Today
Published on

அமெரிக்காவில் நிறுவப்பட்ட மல்டி-நேஷனல் (பன்னாட்டு) தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் (Amazon) இணையவழி வணிகம் (e-commerce), கிளவுட் கணினி சேவைகள் (cloud computing), டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் (streaming), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பல பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது.

“Everything Store” (“எல்லாவற்றையும் விற்கும் கடை”) என்ற அடையாளத்துடன் ஆடைகள், மின்சாதனங்கள், வீட்டு பொருட்கள், மென்பொருட்கள், வீடியோ/மியூசிக், பல்வேறு வகையான பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்து வருகிறது. E-commerce / Online Retail முறையில் நேரடியாக பொருட்களை விற்பனை செய்யும் அதே நேரத்தில், மற்ற விற்பனையாளர்களையும் (Third-party sellers)தங்கள் தளத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கிறது. இந்தியாவிலும் பெரிய பங்கு வகிக்கும் அமேசான் மூலம் இந்திய விற்பனையாளர்கள் (small/tiny business sellers) உலகம் முழுவதும் பொருட்களை ஏற்றுமதி (export) செய்து வருகின்றனர்

2015–2025 காலத்தில் இந்தியாவில் இருந்து Amazon மூலம் 20 பில்லியன் USDக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்ட செய்தியை அறிந்திருக்கலாம். ஒரே இடத்தில் பலவிதமான சேவைகள் எனும் நோக்கத்துடன் உலகளாவிய விற்பனையாளர்க்கான மேடையில் சிறிய வணிகர்கள் / SMEs க்கும் (முக்கியமாக இந்தியாவிலுள்ள) உலக சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகளுக்கான கருவியாக. புதிய தொழில்நுட்பங்களை (cloud, AI, devices) பயன்படுத்தி வணிக முறைகளை மேம்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் தனது முதலீடுகளை விரிவாக்கும் பணியில் அமேசான் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்திய வணிகத்திலும் அமேசான் காலூன்றி நிலைத்து விட்டது நிலையில் அரசின் AI மிஷனை ஆதரிக்கும் வகையில் அமேசான் தனது கிளவுட் மற்றும் ஏஐ கட்டமைப்பு முதலீடுகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது அமேசான். 2023ஆம் ஆண்டு அறிவித்தபடி, 2030க்குள் இந்தியாவில் $12.7 பில்லியன் முதலீடு செய்யும் திட்டத்தில் நிறுவனம் முன்னேறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியா முழுவதும் சிறு தொழில்கள் மற்றும் மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களை 2030க்குள் விரிவுபடுத்துவதற்கான புதிய திட்டங்களை அமேசான் அறிவித்துள்ளது.

சிறு வணிகங்களுக்கு AI கருவிகளை விரிவுபடுத்தியுள்ளதாகவும் இதன் மூலம் 1.5 கோடிக்கும் அதிகமான சிறு நிறுவனங்களுக்கு ஏஐ அடிப்படையிலான கருவிகளை வழங்கப்படும் என்றும் இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் 40 இலட்சம் மாணவர்கள் AI அறிவியல் மற்றும் தொழில் விழிப்புணர்வை அடைவார்கள் என தெரிவித்துள்ளது.

சிறு வணிகங்கள் செய்யும் விற்பனையாளரின் கடை தகவல்களை ஆய்வு செய்து, புதிய வாய்ப்புகளை அடையாளம் காணும் மற்றும் அன்றாடப் பணிகளை தானியக்கமாக்கும் திறன் கொண்ட Seller Assistant எனும் மேம்பட்ட ஏஐ வசதிகளை சிறு தொழில்களுக்கு அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனுடன் AI மூலம் தயாரிப்பு பட்டியல் உருவாக்குதல், விளம்பரங்கள் உருவாக்குதல், வீடியோ தயாரிப்பு போன்றவற்றையும் அறிமுகப்படுத்தி, சிறு விற்பனையாளர்களின் செயல்பாட்டை எளிதாக்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதே போல் 2030க்குள் பள்ளி மாணவர்களுக்கான ஏஐ கற்றல் முயற்சிகளையும் அமேசான் விரிவாக்க உள்ளது. இதில் பாடத்திட்ட ஆதரவு, செயல்முறை திட்டங்கள், ஆசிரியர் பயிற்சி, தொழில் வெளிச்சம் போன்ற நுட்பங்கள் இடம்பெறும்.

ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுடனான வணிகப் போட்டி அதிகரித்து வரும் நிலையில், தனது செயல்பாடுகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வளங்களை விரிவாக்க $233 மில்லியன் முதலீடு செய்யும் திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகிறது.

அமேசான் நிறுவனத்தின் இந்த திட்டங்கள் போதிய பலன் தருமா என்பதை அறிய ஆவலுடன் உள்ளனர் சிறு வணிகர்களும் மக்களும்.

இதையும் படியுங்கள்:
படையப்பா-2.! தலைவர் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா.?
Amazon

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com