
தமிழ்நாட்டில் கட்டிட விதியில் கொண்டுவரப்படும் திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் பயன் அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் கட்டட அனுமதி வழங்க வளர்ச்சியின் அடிப்படையில் பகுதிகள் பிரிக்கப்பட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழ்நாட்டில் டிடிசிபி மற்றும் சென்னை பெருநகர சிஎம்டிஏ உள்ளிட்ட அமைப்புகள் ஒரே மாதிரியான கட்டிட அனுமதி வழங்குதல் விதிகளை பின்பற்றுகின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் தனித்தனியான விதியை பின்பற்றி கட்டிட அனுமதி வழங்குகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி மற்றும் டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ ஆகிய அனைத்து பிரிவுகளும் ஒரே மாதிரியான கட்டிட அனுமதி விதியை பின்பற்ற 2019 ஆம் ஆண்டு பத்திரப்பதிவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதே நேரம் 2019 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விதியில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய அவப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரியான கட்டிட அனுமதி வழங்குதல் விதியை பின்பற்ற குஜராத்தைச் சேர்ந்த சிப்காட் நிறுவனம் விதிகளை வகுத்து அரசிடம் வழங்கி உள்ளது. இதை சிஎம்டிஏ மேற்பார்வை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கட்டிடத்தினுடைய உயரம், பரப்பளவு, சாலை, அகலம், தண்ணீர், பாதுகாப்பு அம்சம் இதர பயன்பாடுகள் என்று அனைத்தும் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் சராசரியான வளர்ச்சி கொண்டு செல்ல இத்திட்டம் பயன்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக பொது கட்டிட விதியில் திருத்தம் மேற்கொள்வதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
டிடிசிபி, சிஎம்டஏ மற்றும் உள்ளாட்சி பகுதிகள் என்று அனைத்தும் ஒருசேர வளர்ச்சியை அடையும். வளர்ச்சி குன்றிய பகுதிகளிலும் அதிகமான பயன்பாட்டை இதன் மூலம் ஏற்படுத்த முடியும். இதனால் மாநிலத்தின் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு ஆகியவையில் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.