பள்ளி செல்வதை தவிர்க்க சிறுவன் சொன்ன நம்பமுடியாத காரணம்!

Chinese school students Representation image
Chinese school students Representation image cms-image-bucket-production-ap-northeast-1-a7d2.s3.ap-northeast-1.amazonaws.com

ள்ளி செல்வதை தவிர்ப்பதற்காக குழந்தைகள் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லுவது வழக்கமானது. ஆனாலும் சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், சமீபத்தில் பள்ளி செல்வதை தவிர்ப்பதற்காக சொன்ன காரணம் நம்பமுடியாததாக இருந்தது. அவனது கதை சமீபத்தில் பல்வேறு சீன சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விஷமத்தனமான அந்த சிறுவன் வீட்டுப்பாடம் செய்யாததால் பள்ளி செல்வதை தவிர்க்க, தமது தந்தை அடித்துவிட்டதாகவும் அதனால் பள்ளி செல்லவில்லை என்று போலீசாரிடம் பொய் சொன்னான்.

இது தொடர்பாக செளத் சீனா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் லிஷுய், போலீசாரை அழைத்து, தந்தை தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் கூறினார். உடனடியாக அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

சமூக ஊடகங்களில் வெளியான அந்த விடியோவில் போலீஸுக்கும் அந்த சிறுவனுக்கும் நடந்த உரையாடலில் அந்த சிறுவனிடம் ஒரு அதிகாரி, ”நீ போலீஸாரை அழைத்தாயா? யார் உன்னை அடித்தது? என்று கேட்பது தெளிவாக இருந்தது. அதற்கு அந்த சிறுவன் “எனது தந்தை” என்று மென்மையாக பதிலளிக்கிறான்.

உடனே அந்த அதிகாரி, சிறுவனின் முதுகில் மெதுவாக தட்டி, “இப்படியா அடித்தார்?” என்று கேட்கிறார். அதற்கு சிறுவன் ஆம் என்பதுபோல் தலையை அசைக்கிறான். அதற்கு அந்த அதிகாரி, “இது ஒன்றும் பலமான அடியாக இல்லையே” என்று கேட்கிறார்.

பின்னர் நீண்ட விசாரணைக்குப் பின் அதிகாரிகள், சிறுவன் வீட்டுப்பாடம் செய்யாததால், பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர் திட்டுவார் என பயந்து பள்ளி செல்வதை தவிர்க்க நாடகமாடுகிறான் என்பதை புரிந்துகொண்டனர்.

நல்ல உள்ளம் கொண்ட அந்த அதிகாரி, உடனடியாக கோபத்தை வெளிப்படுத்தி எதிர்வினையாற்றவில்லை. அதற்கு பதிலாக அந்த சிறுவனுக்கு தனது ஆதரவை தெரிவித்து அவனுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். முதலில் நான் உனக்கு வீட்டுப்பாடங்களைச் செய்ய உதவுகிறேன். அதன் பிறகு உன்னை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று அந்த அதிகாரி சிறுவனிடம் கூறினார்.

ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் சென்று கல்விகற்க வேண்டிய கடமை உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அந்த சிறுவனிடம் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com