
பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடைபெற உள்ளன. இந்த நிலையில் பண்டேல்கண்ட் பிராந்தியத்தில் சாகர் என்னுமிடத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் பரிந்துரைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பண்டேல்கண்ட் திட்டத்தை பா.ஜ.க. அரசு இன்னும் செயல்படுத்தவில்லை என்று கார்கே கூறினார் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவாரே தவிர அதை முழுமையாக செயல்படுத்தியதில்லை என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். சந்த் ரவிதாஸ் நினைவகம் மற்றும் கோவில் அமைப்பதற்கு ரூ.100 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை.
பட்டியலின மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ரவிதாஸுக்கு சாகரில் நினைவகம் அமைக்க மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஆனால், தில்லியில் உள்ள ரவிதாஸ் நினைவகத்தை இடித்துவிட்டனர் என்று கார்கே குற்றஞ்சாட்டினார். தேர்தல் நேரத்தில்தான் பிரதமர் மோடிக்கு ரவிதாஸ் நினைவு வரும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மத்தியப் பிரதேசத்தில் 1.13 கோடி தலித் மக்கள் உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியில் பிற்பட்ட வகுப்பினருக்கான தொகுதிகள் 6 உள்ளன. கடந்த தேர்தலில் ஜடாரா, சந்தலா மற்றும் ஹட்டா ஆகிய 5 தொகுதிகளையும் பா.ஜ.க கைப்பற்றியது. குன்னார் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.
பண்டேல்கண்ட் பகுதியில் சாகர், சத்தார்பூர், திகம்கர், நிமரி, தமோஹ் மற்றும் பன்னா மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது இது. இதில் கடந்த தேர்தலில் பா.ஜ.க. 15 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.