
தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை விளங்குகிறது. தீபாவளி என்றாலே பலரின் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும். பட்டாசு, புத்தாடை என தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னரே நாம் தயாராகிவிடுவோம். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனை கொடிகட்டி பறக்கும் என்பதால், மத்திய மாநில அரசுகள் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் வழக்கமாக அமைக்கப்படும் பட்டாசு கடைகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பட்டாசு கடைகள் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பவர் 12ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்கபடும் என அறிவிக்கபட்டுள்ளது.
சென்னை தீவுத் திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தெரிவித்துள்ளது. பட்டாசு விற்பனைக்காக தீவுத்திடலில் 55 கடைகள் அமைக்கபடஉள்ளன‘ என தெரிவித்துள்ளது.