
டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வியட்நாம் புறப்பட்டார். இந்த நிலையில் வியட்நாம் தலைநகர் ஹனோவில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன் தெரிவித்தது.
இந்தியா ஜி 20 மாநாட்டை நடத்திய விதத்திற்கும், உபசரிப்பிற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வந்து இருந்தார். அப்பொழுது ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடைய உறவு வலுவடைந்து இருக்கிறது.
மேலும் தற்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மனித உரிமைகளை மதிக்க வேண்டும். அதற்கு இந்தியாவினுடைய பங்கு மிக முக்கியமானது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சுதந்திரமான ஊடகத்திற்கு வழி விட வேண்டும். அதனுடைய பங்கு நாட்டினுடைய ஒற்றுமையில் முக்கிய அங்கம் என்பதை பற்றி பேசினேன்.
மேலும் உலக மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா போதுமான நடவடிக்கைகளை எடுக்கும், தலைமைத்துவத்தை உணர்த்தும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வோடு அமெரிக்கா செயலாற்றுவதற்கான முக்கிய தருணம் இது. உலக நாடுகளிடையே சுமுகமான உறவை கொண்டு வரவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, முதலீடு, பருவநிலை மாற்றம், நாடுகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் நேர்மையான பார்வையோடு அமெரிக்கா அணுகி வருகிறது.
ஆசிய பிராந்தியம் மற்றும் வியட்னமாகிய நாடுகளோடு அமெரிக்கா நட்பு உறவை மேலும் வலிமையாக கட்ட முயற்சி எடுத்து வருகிறது. அதுவே எனது நோக்கம். இதற்காக அமெரிக்கா தன்னுடைய தெளிவான செயல்பாட்டை உறுதியாக முன்னெடுத்து வருகிறது.குறிப்பாக சட்டவிரோதமாக நடைபெறும் ரஷ்யா உக்ரைன் போர் சம்பந்தமாக ஜி-20 மாநாட்டில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.