
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மகள் மீரா (16) இன்று அதிகாலை அவருடைய வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்படுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பல ஹிட் பாடல்களை கொடுத்து நடிகராகவும், பாடகராகவும் அசத்தி வருகிறார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.இவருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் 2006ஆம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில், இவர்களுக்கு மீரா,லாரா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவரின் முதல் மகளான மீரா சென்னையில் உள்ள சர்ச் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றிரவு வழக்கம் போல் மீரா அவருடைய அறைக்கு தூங்க சென்றுள்ளார்.இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் எதர்ச்சியாக மீரா அவருடைய அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததை வீட்டின் பணியாளர் பார்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.பின்னர் மீராவின் உடலை கைப்பற்றி கார் மூலம் சென்னை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகளின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மீரா சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளுக்கு தற்கொலை எப்போதும் தீர்வாகாது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தற்கொலை எண்ணம் தோன்றினால் தற்கொலை தடுப்பு மையங்கடிள தொடர்புக்கொண்டு ஆலோசனைப் பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது தன்னார்வ தற்கொலை தடுப்பு மையமான சிநேகா தொண்டு நிறுவனத்திதை Contact: இ மெயில் help@snehaindia.org, தொலைபேசி மூலமாக +91 44 2464 0050 +91 44 2464 0060 தொடர்புகொள்ளமுடியும்.