இந்தியா-பாரத் பெயர் மாற்றம் பீதி மற்றும் திசைத்திருப்பும் முயற்சியே: ராகுல்காந்தி

இந்தியா-பாரத் பெயர் மாற்றம் பீதி மற்றும் திசைத்திருப்பும் முயற்சியே: ராகுல்காந்தி

ரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, இந்தியா-பாரத் பெயர் மாற்ற சர்ச்சைக்கு பீதியே காரணம் என்றும் இது மத்திய அரசின் திசைத்திருப்பும் முயற்சியாகும் என்றும் தெரிவித்தார்.

இந்தியா, அதுவே பாரதம் என்பது என்னைப் பொருத்தவரை சரியாகத்தான் இருக்கிறது. அது நாம் யார் என்பதை குறிக்கிறது. ஆனால், இது விஷயத்தில் அரசுக்கு பயம் இருக்கிறது. ஒருவகையில் அவர்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. இதை திசைத்திருப்பும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன் என்று பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ராகுல்காந்தி தெரிவித்தார்.

ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு இரவு விருந்து கொடுப்பதற்காக குடியரசுத் தலைவர் சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை அரசியல்கட்சிகளிடையே ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கட்டத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு இறங்கக்கூடும் என்றும் வதந்திகள் உலாவந்தன.

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிப் பேசிய ராகுல்காந்தி, அதானி அல்லது அல்லது முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைக்கும்போதெல்லாம் இதுபோன்று திசைத்திருப்பும் நாடகங்களை மோடி அரங்கேற்றி வருகிவருவதாக அவர் கூறினார். நாட்டின் பெயரை மாற்றும் அளவுக்கு பிரதமர் மோடி பீதியடைந்துள்ளார். இது அபத்தமானது என்றார் ராகுல். இந்தியா-பாரத் என்ற இரட்டை பார்முலா அருமையான யோசனை என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின்படி இந்தியா பல மாநிலங்கள் கொண்ட ஒன்றியமாகும் என்று கூறிய ராகுல்காந்தி, யூனியனை வலுப்படுத்துவதற்கான முக்கிய அம்சம் உரையாடல்கள்தான் என்றார்.நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முயற்சிகள் நடப்பதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.

பா.ஜ.க.விடம் ஒரு மாற்றுப்பார்வை உள்ளது. அதிகாரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். யூனியன் உறுப்பினர்களுக்கு இடையே அல்லது இந்திய மக்களுக்கு இடையே உரையாடல்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றார் அவர்.

என்னை பொறுத்தவரை இது இரண்டு கண்ணோட்டங்களுக்கு இடையிலான போர். அதாவது மகாத்மா காந்தியின் கண்ணோட்டம் கொண்டவர்களுக்கும் நாதுராம் கோட்சே கண்ணோட்டம் உடையவர்களுக்குமான போராகும் என்றார் ராகுல் காந்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com