வெளிநாடு தப்பி ஒடிய குற்றவாளிகளிடமிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மீட்பு: அமைச்சர் ஜிகேந்திர சிங் தகவல்!

வெளிநாடு தப்பி ஒடிய குற்றவாளிகளிடமிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மீட்பு: அமைச்சர் ஜிகேந்திர சிங் தகவல்!

டெல்லியில் சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிகேந்திர சிங் கலந்து கொண்டு இந்தியாவில் பண மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய குற்றவாளிகளிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அப்போது அமைச்சர் கூறியது, இந்தியா தற்போது பொருளாதார குற்றங்களை தடுக்க மிகத் தீவிர முன்னெடுப்புகளை செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பண மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய குற்றவாளிகளை திரும்பிக் கொண்டுவர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு 2021ம் ஆண்டு 18 பொருளாதார குற்றவாளிகள் இந்தியாவிற்கு திருப்பி அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு 27 குற்றவாளிகளும் நடப்பு ஆண்டில் தற்போது வரை 19 குற்றவாளிகளும் இந்தியாவிற்கு திருப்பி அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். இவர்களிடமிருந்து 15,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொருளாதார குற்றம் புரிந்து விட்டு வெளிநாடு தப்பி ஓடிய குற்றவாளிகளிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்து மீட்கப்பட்டிருக்கிறது.

சிபிஐ தன்னுடைய செயல்பாடு தீவிரப்படுத்தி இருக்கிறது. மேலும் அமலாக்கத்துறை, காவல்துறை போன்றவை தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியை கண்டிருக்கின்றன. பொருளாதார குற்றங்களை தடுப்பதற்காக தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் பொருளாதார குற்றங்களே தற்போது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பண மோசடி தடுப்பு சட்டம் பொருளாதார குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க எதுவாக இருக்கிறது.

மேலும் பொருளாதார குற்றங்களை முன்பே கண்டறிவதற்காக சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் புலனாய்வு செய்து முன்கூட்டியே உஷார் படுத்துவதன் மூலம் பொருளாதார குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க முடிகிறது. இதனால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com