மம்மியின் வாசனையை மறு உருவாக்கம் செய்த விஞ்ஞானிகள்!
3500 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து நாட்டு பெண்ணை மம்மிஃபிகேஷன் செய்யும்போது பயன்படுத்தப்பட்ட வாசனைகளில் ஒன்றை விஞ்ஞானிகள் மீண்டும் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.
செனட்னே என்ற எகிப்து பெண்ணை மம்மிஃபிகேஷன் செய்யும்போது பயன்படுத்தப்பட்ட 'வாழ்க்கையின் வாசனை' என்று அழைக்கப்படும் ஒருவித வாசனையை விஞ்ஞானிகள் மீண்டும் உருவாக்கியுள்ளனர். அந்த காலத்தில் செவிலியராக இருந்த அப்பெண்ணுக்கு எகிப்து ராஜாவின் ஆபரணமும் பட்டமும் வழங்கப்பட்டது.
அந்த வாசனையை உருவாக்க விஞ்ஞானிகள் செனட்னேயின் நுரையீரல் மட்டும் கல்லீரல் அடைக்கப்பட்டிருந்த இரண்டு ஜாடிகளிலிருந்து எடுக்கப்பட்ட ஆறு தைல மாதிரிகளின் பொருட்களை ஆய்வு செய்தனர். அந்த குறிப்பிட்ட வாசனையை உருவாக்குவதில் தாவர எண்ணெய், தேன் மெழுகு, கொழுப்புகள், பினேசி ரெசின்கள் மற்றும் மர பிசின் ஆகியவை அடங்கும். இந்த வாசனை உருவாக்குவது சிக்கலான அறிவியல் நடைமுறைகளை உள்ளடக்கியதாகும். உடல் உறுப்புகள் போடப்பட்ட ஜாடிகளில் இருந்த கரிம எச்சங்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் இந்த நறுமணத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இதன் மூலமாக, சமூகத்தில் அவர்கள் இருந்த நிலைக்கு ஏற்ப மம்மிஃபிகேஷன் செய்ய வெவ்வேறு வாசனைகள் பயன்படுத்தப்பட்டது அறியப்பட்டுள்ளது.
அந்தப் பெண் மம்மியில் கண்டறியப்பட்ட தைலங்களில் காணப்படும் பொருட்கள், இந்த காலத்தில் இதுவரை எங்குமே கண்டறியப்படாத ஒன்றாகும். அதிலிருந்து கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தி தற்போது உருவாக்கப்பட்ட வாசனைத் தைலம் விஞ்ஞானிகளின் திறமையையும் நுணுக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. அந்த மம்மியில் டம்மர் மற்றும் பிஸ்தாசியா ட்ரீ ரெசின் போன்ற வெளிநாட்டு பொருட்கள் இருப்பது, உடலை மம்யூனிஃபிகேஷன் செய்வது மிகவும் அரிது மற்றும் விலை உயர்ந்தது என்பதைக் குறிக்கிறது.
பண்டைய காலத்து எகிப்திய மம்மிஃபிகேஷன் முறையை நவீன காலத்திற்கு ஏற்றவாறு கொண்டு வருவதில், இது அதிவேகமான அனுபவத்தை அனைவருக்கும் வழங்கி உள்ளதாக இதை உருவாக்கிய குழு தெரிவித்துள்ளது.