சீனப் பெருஞ்சுவரை சேதம் செய்த இருவர் கைது!

Two arrested for vandalizing Great Wall of China.
Two arrested for vandalizing Great Wall of China.

ட்டுமானப் பணிகளின்போது சீனப் பெருஞ்சுவரில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சீனப் பெருஞ்சுவர் மனித வரலாற்றில் மிகச்சிறந்த கட்டிடக்கலை சாதனைகளில் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்ட கோட்டைகளின் வரிசையில் ஒன்று. முதன்முதலாக பல்வேறு நாடோடி பழங்குடியினரின் படையெடுப்புகள் மற்றும் ராணுவ ஊடுருவல்களிலிருந்து சீனாவைப் பாதுகாக்க இது கட்டப்பட்டது. 

உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் இந்த சீனப் பெருஞ்சுவர், 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இது கிமு 200 முதல் 1600களின் மிங் வம்சம் வரை, பல தலைமுறைகளாக ராணுவ பாதுகாப்பிற்காக இந்தப் பெரிய சுவர் கட்டப்பட்டது. தற்போது சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் அமைப்பு மிங் வம்சத்தின் காலத்தில் கட்டப்பட்டதாகும். எனவே இதை மிங் பெரிய சுவர் என்றும் குறிப்பிடுகின்றனர். 

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அறிக்கை ஒன்றில், சீனப்பெருஞ்சுவரின் 30 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் முற்றிலும் மறைந்து விட்டதாகவும், இதில் உள்ள வெறும் 70சதவீதம் மட்டுமே தற்போது நன்கு பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

சேதம் ஏற்பட்ட 32 வது சுவரின் பகுதி மிங் வம்சத்தின் காலத்தைச் சேர்ந்ததாகும். இது கண்காணிப்பு கோபுரத்தின் தலைமைப் பகுதியாக உள்ளது. மேலும் இது அந்த மாகாணத்தின் நினைவுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாகவே சீனாவின் தொலைதூர கிராமப்புறங்களில் சீனப் பெருஞ்சுவரின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது அல்லது மக்களால் இடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது சேதப்படுத்தப்பட்ட சீனாவின் சான்சி மாகாணத்தில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் 32 வது பகுதியை, 38 வயதுடைய ஆண் மற்றும் 55 வயதுடைய பெண் ஆகியோர் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் அதை சேதப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. சீனப் பெருஞ்சுவரில் ஏற்கனவே இருந்த சுரங்கத்தை இவர்கள் இயந்திரங்கள் வைத்து விரிவுபடுத்த முயன்றுள்ளனர். அப்போது சீனப்பெருஞ்சுவர் வெகுவாக சேதம் அடைந்துள்ளது. அந்த சுரங்க வழியாக அருகே நடக்கும் கட்டுமான பணிக்கு, தங்களின் தொழிலாளர்கள் பயணிக்கும் தூரத்தைக் குறைப்பதற்காகவே இந்த செயல் செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் ஏற்படுத்திய சேதம் அச்சுவரில் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுவருக்கு சேதம் ஏற்பட்டுவிட்டதாக கிடைத்த புகாரின் பேரிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு, கிரிமினல் காவலின் கீழ் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com