கார் விபத்தில் பிரபல சீரியல் நடிகை மரணம்!

கார் விபத்தில் பிரபல சீரியல் நடிகை மரணம்!

சாராபாய் vs சாராபாய் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நடிகை வைபவி உபாத்யாய் மே 23 அன்று கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி சாராபாய் vs சாராபாய். இந்த நிகழ்ச்சியில் ஜாஸ்மின் என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் பிரபலமாக அறியப்பட்டார்.

அதன்பின்னர், பிரபல டிவி நடிகையாக, பல சீரியல்களில் நடித்து அனைவராலும் கவரப்பட்டார். ரசிகர்களின் விருப்பமான நட்சத்திரமாகவும் வலம் வந்தார்.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் பஞ்சார் பகுதியில் தனது வருங்கால கணவர் ஜெய் சுரேஷ் காந்தியுடன், வைபவி உபாத்யாய் பயணம் செய்துள்ளார்.

அப்போதுதான், அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து, அதில் வைபவி உபாத்யாய் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த கோரவிபத்தில் பலியான நடிகை வைபவியின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைத்தளம் மூலம் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com