நுங்கு வண்டி ஓட்டி சிறுபிள்ளையாக மாறிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

நுங்கு வண்டி ஓட்டி சிறுபிள்ளையாக மாறிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

தெலுங்கானா ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன், தென்காசியில் நடைபெற்ற காமராஜர் அரங்கம் திறப்பு விழாவின்போது, சிறுபிள்ளையாக மாறி நுங்கு வண்டி ஓட்டி விளையாடி அனைவரையும் குதூகலிக்க வைத்தார்.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் நடைபெற்ற மருத்துவம் மற்றும் கல்வி சேவைக்கான சிறப்பு வளாகமான காமராஜர் அரங்கம் திறப்பு விழா, சுரண்டை நாடார் வாலிபர் சங்க 33-வது ஆண்டு விழா, மாணவ, மாணவிகள் அமைத்திருந்த பனைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழாவில் நடைபெற்றறது.

சிறப்புப விருந்தினர்களாக, அதில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில துணைத்தலைவர் திரு.கருணாகரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனி நாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், பனை மரங்களால் செய்யப்பட்ட பலவகையயான அலங்காரப் பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை ஆர்வமாக பார்வையிட்டு வந்த தெலுங்கானா ஆளுநர் ஆர்வத்தோடு அங்கிருந்த நுங்கு வண்டியை கையில் எடுத்தவர், குழந்தையாக மாறி அந்த நுங்கு வண்டியை ஓட்டி மகிழ்ந்தார்.

மேலும் அவ்விழாவில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், தான் ஆளுநர் என்பதால், இவ்வாறு போலீஸ் கெடுபிடி இருப்பதாக கூறியதோடு, அதற்காக பொதுமக்கள் என்னை மன்னிக்கவும் என்று கேட்டுக்கொண்டார். மேற்கொண்டு பேசிய தமிழிசை செளந்தரராஜன், வெற்றி பெறுவதற்கு மூன்று ரகசியங்கள் உள்ளதாகவும், அவை உழைப்பு... உழைப்பு... உழைப்பு... எனவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com