நீச்சல் குளங்களில் பெண்களுக்கு 25% கட்டணச் சலுகை!

நீச்சல் குளங்களில் பெண்களுக்கு 25% கட்டணச் சலுகை!

தில்? எதனை முன்னிட்டு? மும்பை மாநகராட்சி மகளிர் தினத்தை முன்னிட்டு நீச்சல் குளங்களில் பெண்களுக்கு 25% கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.

மகளிர் தினமன்று பதிவு செய்பவர்களும், ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மகாத்மா காந்தி ஒலிம்பிக் நீச்சல் குளம்; செம்பூர் மேற்கிலுள்ள ஜெனரல் அருண்குமார் வைத்யா  ஒலிம்பிக் நீச்சல் குளம், காந்திவிலி மேற்கிலுள்ள சர்தார் வல்லபாய் படேல், ஒலிம்பிக் நீச்சல் குளம்; தகிசர் கிழக்கிலுள்ள ஸ்ரீமுர்பாலி தேவி நீச்சல்குளம் ஆகிய மாநகராட்சியின் நான்கு நீச்சல் குளங்களின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படவிருக்கிறது.

வருடமொன்றிற்கு ` 8,000/- முதல் ` 10,000/- வரை கட்டணம் கட்ட வேண்டியதில் 25% சலுகை கிடைக்கும்.  இதேபோல சிறிய அளவிலான நீச்சல் குளக் கட்டணம் `6,000/- இல் 25% சலுகை உண்டு. மேலும், மாதாந்திரம்; காலாண்டு கட்டணத்திலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை ஊக்கப்படுத்தவே, கட்டணச் சலுகை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கூலான சலுகை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com