பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 71 ஆயிரம் பேருக்கு வேலை ! பணி ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். .

படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோசர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

ரயில் மேலாளர், நிலைய மேலாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர், காவலர், இளநிலை கணக்கர், வருமான வரித்துறை ஆய்வாளர், வரி உதவியாளர், உதவி பேராசிரியர், ஆசிரியர், நூலகர், செவிலியர், நேரடி உதவியாளர் என அரசின் பல்வேறு பணிகளுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் புதிய வேலைகளை மத்திய அரசு உருவாக்கி வருவதாக தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருவதாகவும் கூறினார். இளைஞர்கள் நவீன தொழில்நுட்பம் கூடிய ட்ரோன்களை தயாரித்து வருவதாக கூறிய அவர், யுவ சக்திக்கும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com