பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

நாட்டின் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி சேவை!

 நாட்டின் 75 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

 இதையடுத்து பிரதமர் பேசியதாவது;

நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் வங்கிசேவைகளை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஏழைகளின் வீட்டு வாசலில் கூட வங்கி சேவைகள் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கத்தை இந்த டிஜிட்டல் வங்கிகள் சாத்தியப்படுத்தும்.

- இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்று வரும் வேளையில், அதை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஏற்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த டிஜிட்டல் வங்கி சேவையில் நாட்டின் 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், ஒரு சிறு நிதி வங்கி ஆகியவை பங்கேற்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com