உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது வழக்கு!

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது வழக்கு!

ராஜ்யசபா எம்பியும், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, ஒரு கோடி ரூபாய் அவதூறு வழக்கு மற்றும் அவரது சுயசரிதைக்கு தடை கோரிய மனுவை, அஸ்ஸாம் பப்ளிக் வொர்க்ஸ் (APW) அமைப்பின் தலைவர் அபிஜீத் சர்மா, உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சர்மா, முறையே ரஞ்சன் கோகோய் மற்றும் அவரது சுயசரிதையான 'ஜஸ்டிஸ் ஃபார் எ ஜட்ஜ்' புத்தகத்தின் வெளியீட்டாளரான ரூபா பப்ளிகேஷன்ஸ் மீது இந்த அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

கோகோய் மற்றும் அவரது வெளியீட்டாளர் தனக்கு எதிராக அவதூறான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளைக் கொண்ட எந்தவொரு புத்தகத்தையும் மேலும் வெளியிடவோ, விநியோகிக்கவோ அல்லது விற்கவோ அல்லது விளம்பரப் படுத்தவோ தடை விதிக்கும் இடைக்காலத் தடை கோரியும் அவர் மனு தாக்கல் செய்தார்.

ரஞ்சன் கோகாய் 2018 முதல் 19 வரை இந்தியாவின் 46 வது தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

அவதூறு வழக்கு மற்றும் தடை உத்தரவுக்கான மனு இங்குள்ள கம்ரூப் பெருநகர மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அவதூறு வழக்கானது செவ்வாய்கிழமை விசாரிக்கப்பட்டு அடுத்த நாளே புதன்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் தீர்ப்பில் நீதிமன்றம் கூறியது, மனு மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த பிறகு, ''சட்டம் மற்றும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய உண்மைகள் இரண்டிலுமே கணிசமான அளவில் கேள்வி உள்ளன'' என்று கண்டறியப்பட்டது.

மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் இருவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தடை உத்தரவு வழக்கில், எதிர் தரப்பினரின் கருத்தை கேட்காமல், எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்கும் வகையில், இந்த விவகாரம் அவசரமானதாக வெளிப்பட்டிருக்கவில்லை என, நீதிபதி தீர்ப்பளித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com