காதலர் தினத்தை முன்னிட்டு JIO அறிவித்துள்ள அதிரடி ஆஃபர்!

காதலர் தினத்தை முன்னிட்டு JIO அறிவித்துள்ள அதிரடி ஆஃபர்!

தொலைத்தொடர்பு உலகில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை முன்னிட்டு தனது ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் 4 அதிரடி சலுகைகள் அறிவித்துள்ளது. 

முதல் சலுகையாக 12 ஜிபி கூடுதல் 4G டேட்டாவை அறிவித்துள்ளது. இந்த சலுகையை ஒருவர் அடைய மை ஜியோ செயலியில் உள்ள வவுச்சர் பக்கத்திற்கு சென்று இதைப் பெற்றுக் கொள்ளலாம். கூடுதலாக கிடைக்கும் இந்த 12 ஜிபி டேட்டா தற்போது நீங்கள் கொண்டிருக்கும் பிளானுக்கான வேலிடிட்டியோடு கிடைக்கும். 

ரண்டாவது, Ixigo ஆப் மூலமாக விமானம் புக்கிங் செய்தால், 750 ரூபாய் சலுகை கிடைக்கும். இதைப் பற்றி அறிய மை ஜியோ செயலியில் Coupons and Winnings பகுதிக்கு சென்று அறிந்து கொள்ளலாம். 

மூன்றாவது, Ferns and Petals என்ற இணையம் வழியாக காதலர் தினத்திற்கு பூக்கள் மற்றும் பூச்செண்டுகளை 150 ரூபாய் சலுகையில் பெற முடியும். இது சார்ந்த விவரங்களையும் மேற்கூறிய coupons and winning பகுதிக்கு சென்று நீங்கள் அறிய முடியும். 

றுதியாக, McDonald's சலுகை. ஜியோ வாடிக்கை யாளர்கள் மெக்டொனால்ட் கடைகளில் ரூபாய் 200 க்கு மேல் ஏதாவது ஆர்டர் செய்தால், 105 ரூபாய் மதிப்புள்ள McAloo Tikki அல்லது Chicken Kebab பர்கர் இலவசமாக வழங்கப்படும். இதை நீங்கள் அந்த நிறுவனத்திடமே ஏதேனும் ஆர்டர் செய்யும்போது கேட்டு பெற்றுக் கொள்ளலாம். 

மேற்கூறிய ஆஃபர்கள் எனக்கு எப்படிக் கிடைக்கும்? 

மேலே குறிப்பிட்ட 4 சலுகைகளை பெற, 249, 899 அல்லது 2999 ரூபாய்க்கான ரீசார்ஜ் நீங்கள் செய்ய வேண்டும். இந்த அனைத்து பேக்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS இலவசம். இந்த ரீசார்ஜ்களை பிப்ரவரி 10 முதல் 14 ஆம் தேதிக்குள் செய்திருக்க வேண்டும். நீங்கள் ரீசார்ஜ் செய்த 72 மணி நேரத்தில், உங்கள் சலுகைக்கான விவரம் மைஜியோ ஆப் மூலமாக உங்களை வந்து சேரும்.சலுகைகள் வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை யாரும் பின்னுக்குத் தள்ள முடியாது. தனது தொடக்க காலத்திலேயே தன் பயனர்களுக்கு இலவச இன்டர்நெட் வழங்கி மற்ற நிறுவனங்களை இருக்கும் இடம் தெரியாமல் ஓட வைத்தது அனைவரும் அறிந்ததே. இதன் வரிசையில் இந்த காதலர் தின ஆஃபர் ஜியோ பயன் பாட்டார்களை பேரின்பத்தில் ஆழ்த்தும் என நம்பலாம். இதை பயன்படுத்திக் கொண்டு காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com