மனைவியின் ஆசைக்காக 60 வயதில் எவரஸ்ட் சிகரம் தொட்ட இந்தியர்!

மனைவியின் ஆசைக்காக 60 வயதில் எவரஸ்ட் சிகரம் தொட்ட இந்தியர்!

உயிரிழந்த மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனைப்படைத்துள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 60 வயதான ஷரத் தினகர் குல்கர்னி.

மலையேறுபவர்களான ஷரத் தினகர் குல்கர்னியும் அவரின் மனைவி அஞ்சலியும் உலகத்தில் உள்ள ஏழு உயரமான சிகரங்கள் ஒவ்வொன்றையும் ஏறி உலக சாதனைப்படைக்கவேண்டும் எனும் லட்சியத்தை கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மே 22ம் தேதி அஞ்சலி மற்றும் ஷரத் தம்பதியினர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறத் தொடங்கினார்கள். அப்போது, எவரஸ்ட் மலையில் ஹிலாரி எனும் ஒற்றை வழி பகுதியில் ஏராளமான மலையேறும் வீரர்கள் இருந்துள்ளனர். இந்த பகுதியில் மேலே செல்வதற்கும் கீழே வருவதற்கும் ஒற்றை கயிறு மட்டுமே உள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் மலையேறும் வீரர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, மலையேற காத்திருந்த அஞ்சலிக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால் உயிரிழந்தார்.

மனைவி அஞ்சலியின் உயிரிழப்புக்கு பிறகு மனதளவில் முடங்கி போயிருந்தார் ஷரத். ஆனால், அதன்பிறகு மனைவியின் கடைசி ஆசையான எவரஸ்ட் சிகரத்தை அடையவேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாக கொண்டு அதனை செயல்படுத்த முடிவுச் செய்தார். இதனையடுத்து எவரஸ்ட் மலையேறும் குழுவினருடன் கடும் பயிற்சிகள் மேற்கொண்டார் ஷரத். பின்னர், கடந்த மே 23ம் தேதி எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய மனைவி அஞ்சலியின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார். அதேபோல், 60 வயதில் எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நபர் என்பதை சாதனையையும் ஷரத் தினகர் குல்கர்னி மற்றொரு சாதனையும் படைத்துள்ளார்.

16ம் நூற்றாண்டில் மனைவி மும்தாஜ்காக தாஜ்மஹால் கட்டினார் மன்னர் ஷா ஜகான. தற்போது 21ம் நூற்றாண்டில் மனைவி அஞ்சலிக்காக தன்னுடைய 60 வயதில் எவரஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டார் ஷரத். காதலும் காதலர்களும் எக்காலத்திலும் அழிவதில்லை என்பதற்கு சாட்சி இந்த சாதனைகள்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com