யாழ்ப்பாணத்தில் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் - இலங்கைத் தமிழர் பிரச்னையை மீண்டும் கையிலெடுக்கிறதா?

யாழ்ப்பாணத்தில் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் - இலங்கைத் தமிழர் பிரச்னையை மீண்டும் கையிலெடுக்கிறதா?

இலங்கையில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், பளவவிழா கொண்டாடுவதை தவிர்த்துவிடாமல் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. பவள விழாவை முன்னிட்டு நீண்டகாலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த 13வது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுமா என்கிற கேள்வி எழுந்தது.

சென்ற மாதம் டெல்லிக்கு சென்ற பா.ஜ.க நிர்வாகிகள், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தலையிடுமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஒரு கோரிக்க மனு கொடுத்திருந்தார்கள். இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி தமிழ்நாட்டில் யாரும் பேசாத நிலையில், தமிழக பா.ஜ.க காட்டி வந்த ஆர்வம் கேள்விக்குறியாக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள், 4 நாள் சுற்றுப் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றிருக்கிறார்கள். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையிலான குழுவில் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பா.ஜ.க நிர்வாகிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணம் சென்று சேர்ந்த தமிழக குழு, இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருக்கிறார்கள். இலங்கை பயணத்தின்போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனை குறித்து பேசவிருப்பதாக தெரிவித்தார்கள்.

இலங்கை யாழ்ப்பாணம் சென்றடைந்த எல்.முருகன் தலைமையிலான குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் சந்திப்பு நடந்தது. பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் உள்ள டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தியா-இலங்கை நட்புறவின் தொடர்ச்சியாக அந்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. காங்கேசன்துறை துறைமுகத்தை தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய வர்த்தக துறைமுகமாக மேம்படுத்த இந்தியா உதவி செய்யும். இது சம்பந்தமாக 45.27 மில்லியன் டாலர் நிதி உதவி ஏறக்னவே வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையே கடல்வழி போக்குவரத்து ஆரம்பமாகவிருக்கிறது. தமிழக மீனவர்களுக்கும் இலங்கைத் தமிழர் மீனவர்களுக்கும் தொடர்ந்து மோதல் நீடிக்கிறது. இதை தீர்த்து வைப்பது எளிதான விஷயமல்ல. தமிழக பா.ஜ.க ஏதாவது மாற்றம் கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com