அருணாச்சல பிரதேசம்: கிராமங்களுக்கு பெயர் சூட்டுவதில் ஆர்வம் காட்டும் சீனா; இந்தியாவின் அதிருப்தி!

அருணாச்சல பிரதேசம்: கிராமங்களுக்கு பெயர் சூட்டுவதில் ஆர்வம் காட்டும் சீனா; இந்தியாவின் அதிருப்தி!

அருணாச்சல பிரதேச பிரச்னையில் சீனா மீண்டும் மூக்கை நுழைத்துள்ளது. கடந்த வாரம், இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள எல்லைப் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களுக்கு புதிதாக சீனா பெயரிட்டிருக்கிறது. இது இந்திய வெளியுறவுத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

இமயமலையை ஒட்டியுள்ள அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் நீண்டகாலமாக பிரச்னைகள் இருந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தின் முழுப் பகுதியையும் சீனா உரிமை கோருகிறது. சீனா அரசின் ஆவணங்களில் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் குறிப்பிடப்படுகிறது.

சுமார் மூவாயிரம் கி.மீ தூரமுள்ள இந்திய, சீனா எல்லைப்பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாகவே பதட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த கிராமங்களை தன்னுடைய அதிகாரப்பூர்வ வரைபடத்தில் தன்னுடைய ஆளுகையில் உள்ள பகுதியாகவே சீனா முன்வைக்கிறது.

சீனா, இந்தியாவில் உலகிலேயே பெரிய அளவில் ராணுவ பலம் கொண்ட நாடுகள். இருநாடுகளுக்கிடையேயான மோதல்கள் உலக அளவில் கவனிக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பு கூட தவாங் என்னுமிடத்தில் சீன, இந்திய படைகள் மோதிக்கொண்டதாக செய்திகள் வெளியிகியிருந்தன. உக்ரைன் யுத்தத்திற்கு பின்னர், சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

15 ஆண்டுகளுக்கு முன்னர் பெயரிடும் சம்பவத்தை சீனா ஆரம்பித்து வைத்தது. முதலில் இந்திய எல்லைப்பகுதியில் உள்ள 6 இடங்களுக்கு பெயர் சூட்டப்பட்டது. பின்னர் 2021ல் 15 இடங்களுக்கு பெயர்களை மாற்றி அறிவித்தது. இந்தியாவில் அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக அருணாசலப் பிரதேசத்தில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள சீன மொழியில் சீன அரசு பெயர்களை சூட்டியிருக்கிறது. இது இந்தியாவின் வெளியுறவுத்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, அருணாச்சல பிரதேச மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவிலிருந்து யாராலும் அதை பிரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எல்லைப் பிரச்னையில் எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனத்தை சந்தித்து வரும் மோடி அரசுக்கு அருணாச்சல பிரதேசத்தில் சீனா காட்டிவரும் அதிரடி, மோடி அரசுக்கு பெரிய சிக்கலை தந்திருக்கிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com