அசாதுதீன் ஒவைசியின் உறவினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

அசாதுதீன் ஒவைசியின் உறவினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

60 வயதான எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஜாருதீன் அலி கான், பஞ்சாரா ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் நெருங்கிய உறவினர் என்பதும் ஹைதராபாத் ஓவைசி மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறந்தவரது உடலின் Rigor mortis (ரிகர் மோர்டிஸ் என்பது மரணத்திற்குப் பிந்தைய உடல் தசைகள் மற்றும் மூட்டுகளின் விறைப்பைக் கணக்கிடும் ஒரு நிலை) வைத்துப் பார்க்கும் போது, அவர் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்பே தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள்,” - என்று ஹைதராபாத் மேற்கு மண்டல டிசிபி ஜோயல் டேவிஸ் கூறினார்.

டிசிபி ஜோயல் டேவிஸ், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் பிரேதப் பரிசோதனையின் வீடியோவைக் கோரியதால் அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார். மேலும், வழக்கு பற்றிய உண்மைகளை கண்டறிய துப்புக் குழு தடயங்களை சேகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காலை 6 மணி முதல் 11 மணிக்குள்ளாகத்தான் இந்த பயங்கரம் நடந்திருக்கிறது. வீட்டின் வலது மூலையில் இருந்த அறைகளில் ஒன்றில் டாக்டர் மஜாருதீன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக அங்கிருந்தோர் தெரிவித்தனர். வீட்டின் முதல் தளத்தில் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்ப தகராறு தான் அவரை இந்த நடவடிக்கைக்கு தள்ளியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு தான் டாக்டர் மஜாருதீனிடம் இருந்து பிரிந்து போன அவரது முன்னாள் மனைவி அவருக்கு எதிராக சொத்து தொடர்பான சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது. சம்பவத்தின் போது டாக்டர் மஜாருதீனின் இந்நாள் மனைவியும் மகனும் வீட்டில் இருந்தனர் ஆனால் யாருக்கும் துப்பாக்கிச் சத்தம் கேட்கவில்லை. இந்த சம்பவம் குறித்து மதியம் 2 மணியளவில் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

பின்னர் மாலை உஸ்மானியா மருத்துவமனையின் பிணவறையில் பிரேதப் பரிசோதனை வீடியோ மூலம் நடைபெற்றது. டாக்டர் மஜாருதீன் அலி கான்,அசாதுதீன் ஓவைசியின் மகளின் மாமனார் ஆவார். செய்தி அறிந்ததும், AIMIM சட்டமன்றத் தலைவர் அக்பருதீன் ஒவைசி, சவக்கிடங்கிற்குச் செல்வதற்கு முன்பு, தற்காலிகமாக சடலம் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.

இதற்கிடையில், போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com