மூங்கில் விவசாயம்... கை நிறைய சம்பாதிக்கலாம்

மூங்கில் விவசாயம்... கை நிறைய சம்பாதிக்கலாம்

ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பது போல, ஏழைகளின் மரம் என்ற பெருமைக்குரியது மூங்கில். புல் இனத்தைச் சேர்ந்த இந்தத் தாவரம் அண்டார்டிகா, ஐரோப்பா தவிர உலகம் எங்கும் காணப்படுகின்றது. பூமியில் 190 வகைகளில் 1600 இனங்கள் உள்ளன. இதில் 138 இனங்கள் இந்தியாவில் உள்ளன. அதிவேகமாக வளரும் இவை எடை குறைவு, உறுதித்தன்மை, மினுமினுப்பு போன்ற பண்புகளால் கட்டுமான செயல்களுக்கு உகந்தவையாக உள்ளன.

இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத் தொழில் செய்கிறார்கள். கிராமங்களில் உள்ள பல குடும்பங்களின் வருமானத்துக்கு ஆதாரமாக விவசாயம் மட்டுமே உள்ளது. விவசாயத்தில் அதிக வருமானம் கிடைக்கிறது.

சரியான திட்டமிடலுடன் நல்ல லாபம் தரும் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட்டால் அதிகம் சம்பாதிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தொழில் உள்ளது. அதுதான் மூங்கில் விவசாயம்.

மூங்கில் விவசாயத்தை “பச்சை தங்கம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதில் நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும். இந்தியாவில் மூங்கில் சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும் நிறைய விவசாயிகள் இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் இந்திய அரசு 2006-07ஆம் ஆண்டில் தேசிய மூங்கில் இயக்கத்தைத் தொடங்கியது. இதன் மூலம் மூங்கில் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்குகிறது.

மூங்கில் வளர்ப்பு என்பது மற்ற பயிர்களை விட சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதன் மூலம் நல்ல வருமானத்தையும் பெறலாம். ஏனெனில் இந்தப் பயிர் எந்த பருவத்திலும் கெட்டுப்போவதில்லை.

மூங்கில் பருவ கால அடிப்படையில் பயிரிடப்படுவ தில்லை. இதன் சாகுபடிக்கு 4 ஆண்டுகள் ஆகிறது. இதைப் பயிரிட நிலத்தை பிரத்தியேகமாகத் தயார் செய்யத் தேவையில்லை. மூங்கில் சாகுபடிக்கு மண்ணின் pH மதிப்பு 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். ஒரு ஹெக்டேரில் 625 மூங்கில் செடிகளை நடலாம். மூங்கில் செடிகளை அவ்வப்போது அறுவடை செய்ய வேண்டும்.

மூங்கில் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 1,500 செடிகள் வரை நடலாம். மூங்கில் பயிர் சுமார் 3 ஆண்டுகளில் தயாராகிவிடும். ஒரு செடியின் விலை 250 ரூபாய் வரை இருக்கும். மூங்கில் வளர்ப்புக்கு அரசு மானிய உதவி தொகை கிடைக்கும். மூங்கில் சாகுபடிக்காக தேசிய மூங்கில் இயக்கத்தை அரசு நடத்தி வருகிறது. நீங்கள் சுமார் 2 லட்சம் ரூபாய் செலவு செய்தால் போதும்; 3 வருடங்கள் கழித்து 1 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்து சுமார் 3.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.

மூங்கில் விவசாயத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், மூங்கில் பயிர் 40 ஆண்டுளுக்குத் தொடர்ந்து வருமானம் தரும். அதாவது நீங்கள் 25-30 வயதில் மூங்கில் விவசாயம் செய்யத் தொடங்கினால் 65-70 வயது வரை அதே மூங்கில் மூலம் நீங்கள் சம்பாதிக்கலாம். ஒரு முறை மூங்கில் விவசாயம் செய்து வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்கலாம். மூங்கில் பயிர்களுக்கு அதிக கவனிப்பு தேவையில்லை. எனவே நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே பெரிய தொகையை சம்பாதிக்கலாம்.

இவற்றிற்கு நீர்மாசுக்களை உறிஞ்சி எடுக்கும் ஆற்றல் உண்டு. நட்டது முதல் உயிருள்ளவரை வெட்ட வெட்ட கிளைகள் மீண்டும் மீண்டும் வளர்வதால் இவற்றை “மறுஜென்மம் எடுக்கும் மரங்கள்“ என்று சொல்லலாம். இவை இனத்திற்கு ஏற்ப 20 முதல் 120 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஒரு வித்திலைத் தாவரங்களான இவை ஆயுள் முடியும்போது ஒன்றுசேர்ந்து பூக்களை மலரச் செய்கின்றன.

கைவினைப் பொருட்கள், ஆயுதங்கள், மருந்துகள், வீட்டு உபகரணங்கள், இருக்கைகள், வேளாண் கருவிகள், சமூகப் பயன்பாட்டிற்குரிய உபகரணங்கள், வீட்டு கட்டுமானங்கள் போன்றவற்றிற்கு நீடித்த மூலப் பொருளாக மூங்கில் பயன்படுகிறது. மூங்கில் வீடுகள் சூழலுக்கு நட்புடையவை, குறைந்த செலவிலானவை. மூங்கிலின் அரிசி, பூ மொட்டுகள் உணவாகப் பயன்படுகின்றன. இதன் தடி ஒரு எரிபொருள், நீர் சுத்திகரிப்பான்.

பல உயிரினங்களின் உணவாகவும், வாழிடமாகவும் உள்ளன. 2009 முதல் செப்டம்பர் 18 உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.

புல்லாங்குழல் தரும் மூங்கில்கள் உள்ளுக்குள் எதையும் மறைத்து வைத்துக் கொள்வதில்லை. உள்ளீடற்ற அப்பகுதி வெறும் சூன்யமே! வெட்ட வெட்ட வளர்ந்து பயன் தருகிறது. உயிருள்ளவரை மற்றவர்களுக்காக வாழ்கிறது. மூங்கில் போல நாமும் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com