துங்கா கால்வாய்
துங்கா கால்வாய்

பா.ஜ.க எம்.எல்.ஏ மருமகன் உடல் அழுகிய நிலையில் மீட்பு!

கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யாரின் மருமகன் சந்திரசேகர் என்பவர் கடந்த 4 நாட்களாக காணாமல் போனதாக புகார் தரப்பட்டிருந்தது. . தற்போது கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ மருமகனின் உடல், தாவங்கரே மாவட்டத்தில் உள்ள துங்கா கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட காரில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஹொன்னாலி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சார்யா. இவரின் மருமகன் சந்திரசேகர் (25) அக்டோபர் 30ம் தேதி ஷிவமொக்காவிலிருந்து ஹொன்னாலிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை என அவரின் தந்தை ரமேஷ் கூறினார். தாய் அடுத்து தன் மகனை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரைக் கண்டுபிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

விசாரணை
விசாரணை

இந்த நிலையில், தாவங்கரே மாவட்டத்தில் உள்ள துங்கா கால்வாயில் வெள்ளை நிற எஸ்யூவி கார் இருப்பதாக காவல்துறைக்கு நேற்று தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறையினரால் அந்தக் கார், கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. அப்போதுதான் இது பா.ஜ.க எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யாவின் மருமகன் சந்திரசேகரின் கார் என்பது தெரியவந்தது. மேலும், அதற்குள் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com