கேரள பெண் மருத்துவர் கொலை விவகாரம்:சட்ட திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்!

கேரள பெண் மருத்துவர் கொலை விவகாரம்:சட்ட திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்!

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில், அதிகபட்ச 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் இளம் பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பணியாளர்களையும் பாதுகாக்க கோரிக்கை வலுத்து வருகின்றன.

இந்திய மருத்துவ கூட்டமைப்பு அழைப்பு பணியிடங்களில் சுகாதார நலம் சார்ந்த பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தது. டாக்டர்களை பாதுகாக்க முடியாவிட்டால், மருத்துவமனைகளை மூடுங்கள் என்று இந்த சம்பவத்திற்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

கேரள உயர்நீதிமன்றம்
கேரள உயர்நீதிமன்றம்

இந்த நிலையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அரசு வேடிக்கை பார்க்காது என்று அண்மையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளாவில் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிபடுத்தவும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் 2012-யை திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப் பட்டது.

இதன்படி, குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு, அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் குறைந்த பட்சமாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com