காற்றின் மூலம் சுத்தமான தண்ணீர்!

மும்பை பர பர
காற்றின் மூலம் சுத்தமான தண்ணீர்!

மீபத்தில் CSM T ரெயில் நிலையத்தில் 5 ஜெனரேட்டர் களை பொருத்தியுள்ளனர்.

எதற்காக?

இதன் மூலம் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் காற்றில் இருந்து பெறப்பட்ட சுத்தமான நீரை அருந்தலாம்.

காற்றிலிருந்து ஒருமணி நேரத்தில் 30 முதல் 40 லிட்டர் தண்ணீரை ஒவ்வொரு ஜெனரேட்டரும் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. ஜெனரேட்டரின் உள்ளே 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்கும், வெளியே மேற்கொண்டு 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்கும் உள்ளன.

ஒவ்வொரு ஜெனரேட்டரும் CSMT பிளாட்பாரம் எண் 1,6,7,14,18, களில் நிறுவப்பட்டுள்ளன. இந்த சுத்தமான காற்று தண்ணீருக்கு விலை உண்டு.

விலை விபரங்கள்.

ரு லிட்டர் தண்ணீரின் விலை 15/- காலி பாட்டிலை பயணி கொண்டுவரும் பட்சத்தில் அதன் விலை 12/-.

சி.எஸ்.எம்.டி. யிலுள்ள 5 ஜெனரேட்டர்கள் தவிர, தாதரில்-5, குர்லாவில்-1, தானேயில்-4, காட்கோவரில்-1, விக்ரோலியில்-1, என மொத்தம் 6 ரெயில் நிலையங்களிலும் தண்ணீர் ஜெனரேட்டர்கள் (17) பொருத்த மைத்திரி அக்குவாடெக் பிரைவேட் லிமிடெட்டிற்கு ஐந்து வருடங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com