40 MLA-க்கள் மீது கிரிமினல் வழக்குகள்...

40 MLA-க்கள் மீது கிரிமினல் வழக்குகள்...

நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 182 எம்.எல்.ஏ.க்களில், 40 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு விவரங்களை ஆய்வு செய்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

குற்ற வழக்குகள் உள்ள 40 சட்டமன்ற உறுப்பினர்களில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் 26 பேர், காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் 9 பேர், ஆம் ஆத்மி கட்சியினர் இருவர், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஒருவர் மீதும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. கிரிமினல் வழக்குகள் உள்ள எம்எல்ஏக்களில், 29 பேர் மீது கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முந்தைய தேர்தலில் 47 எம்எல்ஏக்கள் மீது குற்றவழக்குகள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 40ஆக குறைந்துள்ளது என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே குஜராத்தில் ஆம் ஆத்மியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள், பாஜக-வுடன் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அப்படி நடந்தால், பா.ஜ.க. - ஆம் ஆத்மி கூட்டணியிலான ஐந்தாவது மாநிலமாக குஜராத் மாறும்.

இதற்கு முன் ராஜஸ்தான், உத்தரகாண்ட், கோவா, ஹரியானா ஆகிய மாநிலங்களில்தான் ஆம் ஆத்மி கட்சி தங்களின் தேர்தல் வெற்றிக்குப்பின் பாஜக-வோடு இணைந்தது. இப்போது குஜராத்திலும் அதையே செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பயானி என்பவர், 'நான் பா.ஜ.க.-வில் சேரவில்லை. ஆனால், சேர்வதா வேண்டாமா என எனக்கு வாக்களித்த மக்களிடம் கேப்பேன்' என்று பேசியுள்ளார். அவர் இப்படி சொல்லியிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

இந்த கூட்டணி குறித்து குஜராத் பாஜக-வோ, ஆம் ஆத்மியோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், சூசகமாக சொல்லிவருகின்றனர்.

ட்விட்டர்வாசிகள், ` சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்க ஆம் ஆத்மிக்கு பி.ஜே.பி. நிதியுதவி அளித்ததா?' என்று கூறி கேலி செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com