
மத்திய பல்கலைக்கழகங்களின் இளங்கலை படிப்புகளுக்கு சேருவதற்காக நடத்தப்பட்ட CUET நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விகொள்கையின்படி, இந்த ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை CUET பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 500 நகரங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் இந்த CUET நுழைவுத் தேர்வு நடைபெற்றது கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 6 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வின் முடிவுகள் இன்று அதிகாலை வெளியானது.
-இதுகுறித்து தேசிய தேர்வு முகமை தெரிவித்ததாவது:
இன்று வெளியிடப்பட்ட CUET நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை தேசியத் தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணைய தளமான https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு எழுதியவர்களின் விவரங்கள், தொடர்புடைய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், தேர்வர்கள் தாங்கள் சேர விரும்பிய பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு சேர்க்கை பெறலாம்.
-இவ்வாறு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.