மூக்கு வழி கோவிட் தடுப்பூசி! விலை என்ன தெரியுமா?

தடுப்பூசி
தடுப்பூசி

ந்தியாவில் முதன் முதலாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 18 வயதுக்கு மேலானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசியாக இது செலுத்தப்படும்.

கொரோனா தொற்றுக்கு எதிராக மூக்குவழியாக தடுப்பு மருந்து செலுத்தும் முறையை அறிமுகப்படுத்திய நாடுகளில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

சாதாரண மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள மக்கள் வாங்கி பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் தரமான முறையில் இந்த தடுப்பூசி வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களிலும், தொற்றுக்காலங்களிலும் எளிதில் இதை பயன்படுத்தலாம்.

தடுப்பு மருந்தை ஊசியின் வழியாக உடலுக்குள் செலுத்தாமல் சொட்டு மருந்தாக மூக்குக்குள் செலுத்தும் முறையே இன்ட்ரா நாஸல் வாக்ஸின்.

மூக்குவழியாக தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்வதன் மூலம் ஊசியால் எடுத்துக்கொள்ளும் போது ஏற்படும் வலியை தவிர்க்க முடியும். மேலும் அது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிடும். இது மிகவும் எளிமையானது என்கிறது பாரத் பயோடெக் நிறுவனம்.

இந்த மூக்கு வழியாக செலுத்தப்படும் கோவிட் தடுப்பூசி வரும் 2023 ஆண்டு ஜனவரி நான்காவது வாரத்தில் விற்பனைக்கு வரும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி தனியாருக்கு ரூ.800 என்ற விலையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.325 விலையிலும் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

மூக்குவழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பூசியை (சொட்டு மருந்து) பயன்படுத்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருந்தது. கோவின் (COVIN) தளத்தில் பதிவு செய்துகொண்டால் இந்த தடுப்பூசி கிடைக்கும்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் செயின்ட் லூயிஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com