மகர சங்கராந்தி அன்று மேளதாளத்துடன் இந்து மத சடங்கோடு நிகழ்ந்த நாய்கள் திருமணம்: எங்கே தெரியுமா?

மகர சங்கராந்தி அன்று மேளதாளத்துடன் இந்து மத சடங்கோடு நிகழ்ந்த நாய்கள் திருமணம்: எங்கே தெரியுமா?

இப்போதெல்லாம் இந்தியாவில் நாய் வளர்ப்பவர்கள் தங்கள் நாய்க்கு திருமணம் செய்துவைப்பது ஒரு பெரிய நிகழ்வாகவே நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் கடந்த வாரம் நடந்துள்ளது. ஒருவர் தனது 7 மாத பெண் நாய்க்கு இந்தியத் திருமணம் போலவே அனைத்து மதச் சடங்குகடளுடன் திருமணம் செய்துவைத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் தினேஷ் செளதுரி. இவர் முன்னாள் கிராமத் தலைவராக இருந்தவர். இவர் டாமி என்ற நாயை செல்லமாக வளர்த்து வந்தார்.

இதேபோல அட்ரெளலியில் திக்ரி ராய்ப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ராம் பிரகாஷ் சிங். இவர் ஜெல்லி என்ற பெண் நாயை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் டாமி-ஜெல்லி இரண்டுக்கும் திருமணம் நிச்சயமானது. மேலும் திருமணத்தை மகர சங்கராந்தி (ஜன. 14) அன்று நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மகர சங்கராந்தி அன்று இரு வீட்டைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் மணமகனுக்கும் (டாமி), மணமகளுக்கும் (ஜெல்லி) மேளதாளத்துடன் திருமணம் நடந்தது.

முதலில் டாமி, ஜெல்லிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. பின்னர் அவை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன. பின்னர் ஜெல்லி வீட்டார் டாமிக்கும், டாமி வீட்டைச் சேர்ந்தவர்கள் ஜெல்லிக்கும் நெற்றியில் திலகமிட்டனர். இதையடுத்து இரண்டுக்கும் அனைத்து சடங்குகளுடன் திருமணம் செய்விக்கப்பட்டது. தங்களது செல்லப்பிராணிக்கு திருமணம் சிறப்பாக நடந்ததை அடுத்து இரு வீட்டாரும் டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி மகிழ்ந்தனர். திருமணம் நடைபெற்ற இடத்தை சுற்றியிருந்த நாய்களுக்கும் சிறப்பான

விருந்து வழங்கப்பட்டது. இந்த திருமணத்துக்கு ரூ.45,000 செலவிட்டதாக டாமியின் உரிமையாளர் செளதுரி தெரிவித்தார்.

நாய்களுக்கு திருமணம் நடப்பதும் அவை தலைப்புச் செய்தியாக பேசப்படுவதும் ஒன்றும் புதிது அல்ல. கடந்த ஆண்டு நவம்பரில் இதேபோன்ற நாய்கள் திருமணம் குருகிராமில் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்காக நாய்களின் உரிமையாளர்கள் 100 அழைப்பிதழ்கள் அச்சடித்து விநியோகித்து ஊரையே கூட்டி ஹிந்துமத சடங்குபடி, மேளதாளம், நடனத்துடன் திருமண விழாவை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com