கல்லிலே கலைவண்ணம் காணும் தோச மாஸ்டர்!

கல்லிலே கலைவண்ணம் காணும் தோச மாஸ்டர்!

தெரு ஓரங்களில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடும் ரசிகர்கள் அதிகம், அதிலும் சிலர் அந்த உணவுகளை பார்சலும் வாங்கிச் செல்வார்கள். இதற்கு காரணம் இட்லி, தோசை, பூரி, வடை உள்ளிட்ட உணவுகள் சுவையாக இருப்பது மட்டுமல்ல, அவை தயாரிக்கப்படும் விதமும் காரணமாகும்.

சாலையோர உணவகங்களில் என்னென்ன உணவுகள் தயாரித்து விற்கப்படுகின்றன. அவை எப்படி தயாரிக்கப்படுகின்றன. என்னென்ன பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி அவ்வப்போது விடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதை பார்ப்பவர்கள் அந்த இடங்களுக்குச் சென்று தங்களுக்கு பிடித்தமான உணவை வாங்கி உண்பதும் உண்டு.

இந்த நிலையில் தெருவோரத்தில் உள்ள கடையில் ஒருவர் விதம்விதமான கலை வண்ணத்தில் தோசை தயாரிக்கும் விடியோ சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது இணையத்தை பயன்படுத்தும் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விதம் விதமான உணவை விரும்பி சாப்பிடுபவர்களை அதே மாதிரி தோசை தயாரித்து சாப்பிடவும் முயற்சித்து வருகின்றனர்.

நாந்தி அறக்கட்டளையின் தலைமைச் செயல் இயக்குநர் மனோஜ் குமார், இது தொடர்பான விடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த விடியோவில், தெருவோர உணவகத்தைச் சேர்ந்த தோசை மாஸ்டர், முதலில் தோசை மாவை தாவாவில் வட்டமாக ஊற்றுகிறார். பின்னர் விலங்குகள் போன்ற உருவத்தை உருவாக்குகிறார். பின்னர் பக்கத்திலேயே சிறிய வட்டமாக மாவை ஊற்றுகிறார். அது விலங்கின் தலைப்பகுதியாக மாறுகிறது. இப்படியாக ஒரு பூனையின் உருவம்போல தோசை தயாரித்தார். தோசை திருப்பியால் கீறி கண்கள், மூக்கு, வாய் பாகங்களை ஏற்படுத்துகிறார். பின்னர் தோசை சுட்டபின் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறுகிறார்.

“இந்தியாவில் தெருவோர உணவு வியாபாரிகள் புதுமையை புகுத்துவதில் வல்லவர்கள். கலைநுணுக்கத்துடன் தோசை தயாரிக்கும் இவருக்கு பாராட்டு தெரிவியுங்கள்” என்று அந்த விடியோவின் கீழ் எழுதப்பட்டிருந்தது.

இந்த விடியோவை 18,000-த்துக்கும் மேலானவர்கள் பார்வையிட்டுள்ளனர். 310-க்கும் மேலானவர்கள் லைக்ஸ் போட்டுள்ளனர்.

“சூப்பர்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். “லவ்லி”. நல்லவேளை புதுமை என்று அவர் யாரையும் அச்சுறுத்தவில்லை என்று மற்றொருவர் கருத்து பதிவிட்டுள்ளார். கல்லிலே கலைவண்ணம் என்ற பெயரில் அவர் தோசையுடன் ஐஸ்க்ரீம் சேர்க்காமல் இருந்தாரே அந்த வகையில்

மகிழ்ச்சிதான் என்று மூன்றாமவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com