தூக்கம் வருகிறது… அழைப்பை ரத்துச் செய்யுங்கள் உபேர் டிரைவரின் நேர்மைக்கு குவியும் பாராட்டுகள்!

தூக்கம் வருகிறது… அழைப்பை ரத்துச் செய்யுங்கள் உபேர் டிரைவரின் நேர்மைக்கு குவியும் பாராட்டுகள்!

இன்று ஏதாவது ஒரு வேலையாக வெளியில் செல்ல விரும்புவோர் உபேர், ஓலா போன்ற வாகனங்களை அதற்கான செயலி மூலம் புக் செய்துவிட்டு டிரைவரின் வருகைக்காகக் காத்திருப்பார்கள். இன்னும் சிலர், கார் உடனடியாக வராவிட்டால் விரக்தியில் டிரைவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் எப்போ வருவீர்கள்… எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டு செய்தி அனுப்புவார்கள் அல்லது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

எனினும் சில நேரங்களில் காத்திருந்துவிட்டு, டிரைவரை தொடர்பு கொண்டால் கூலாக, அழைப்பை ரத்துச் செய்துவிடுங்கள் என்று கூறிவிடுவார்கள். இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஒன்றும் புதிது அல்ல, எல்லோருக்கும் அப்படி நடப்பதும் இல்லை. ஆனால், தங்கள் அழைப்பை ரத்து செய்ததற்கான உண்மையான காரணங்களை தெரிவிக்கும் நேர்மையான டிரைவர்களை பாராட்டவும் செய்வார்கள். இதைத் தான் ஒரு கார் டிரைவர் செய்து பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். “உங்கள் அழைப்பை ரத்துச் செய்துவிடுங்கள். எனக்கு தூக்கம் வருகிறது. நான் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்புகிறேன்” என்று ஒரு டிரைவர், வாடிக்கையாளரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை இணையதள பயன்பாட்டளரான ஆஷி, டுவிட்டர் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த அந்த பெண், வெளியில் செல்வதற்காக உபேர் டிரைவருக்கு செயலி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். பரத் என்னும் பெயருடைய அந்த டிரைவரும் முதலில் அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும் பின்னர் அந்த பெண்ணுக்கு, “நான் தூக்கத்தில் இருக்கிறேன். உங்கள் அழைப்பை ரத்துச் செய்துவிடுங்கள்” என்று செய்தி அனுப்பியதுடன் அரைத் தூக்கத்திலிருக்கும் தனது படத்தையும் ஸ்கிரீன் ஷாட்டாக அனுப்பியுள்ளார். இதைப் பார்த்த அந்த பெண்ணும் “ஓகே” என்று பதிலனுப்பிவிட்டார்.

“நீண்ட பல சவாரிகளுக்குப் பிறகு நான் சோர்ந்து போய் இருக்கிறேன். எனக்கு இப்போது தூக்கம் தேவைப்படுகிறது. எனவே உங்கள் அழைப்பை ரத்துச் செய்துவிடுங்கள்” என்று அந்த டிரைவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயல் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சுமார் 2.9 லட்சம் பேர் அந்த பெண்ணின் டுவிட்டர் பதிவை பார்வையிட்டுள்ளதுடன் பலரும் டிரைவரின் செயலை பாராட்டியுள்ளனர்.

“பரவாயில்லையே அந்த டிரைவர் உண்மையாக நடந்து கொண்டுள்ளார்”. நான் ஒரு முறை பெங்களூர் விமானநிலையத்திலிருந்து இதுபோன்று காரில் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் திடீரென காரை ஓரங்கட்டி, “மேடம், என்னால் இனிமேல் கார் ஓட்டமுடியாது. எனக்கு தூக்கம் வருகிறது. நான் சிறிது ஓய்வெடுக்கப் போகிறேன்” என்று சொன்னபோது நான் பயந்துபோய்விட்டேன். ஏனெனில் அப்போது அதிகாலை 3.30 மணி” என்று ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை பதிவிட்டுள்ளார்.

மற்றொருவரும் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறிப்பிட்டுள்ளார். “நான் ஆட்டோவை புக் செய்தேன். ஆனால், அந்த டிரைவர், யூடியூப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னால் வர இயலாது என்று மறுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு டிரைவர் எனது அழைப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஐந்து நிமிடங்களாகியும் அவர், வாகனத்தை இயக்கவில்லை. நான் தொடர்பு கொண்டு பேசியபோது, உங்கள் அழைப்புக்காக காத்திருந்தேன்” என்று கூறினார். “உங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்ட டிரைவர் வரமுடியாததற்கான காரணத்தையாவது கூறினாரே. அவரை பாராட்டத்தான் வேண்டும்” என்று மற்றொரு நபர் தமது அனுபவத்தை பதிவிட்டிருந்தார்.

இன்னொரு நபர், “வேலையையும், வாழ்க்கையையும் சமநிலையில் பாவிக்கும் அந்த டிரைவருக்கு எனது பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com