‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை போட்டிருக்க வேண்டாம்; கோவா சர்வதேச திரைப்பட விழா நடுவர்!

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டது துரதிர்ஷ்டமானது என்று திரைப்பட விழா நடுவர் நடாவ் லாபிட்  தெரிவித்துள்ளனர்.

கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன்  நிறைவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழுவை சேர்ந்தவருமான நடாவ் லாபிட் தலைமை ஏற்றார்.

நிறைவு விழாவில் பேசிய நடாவ் லாபிட், “இந்த சர்வதேச திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ஏனெனில், இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் கலை, மற்றும் கருத்து கொண்ட படங்கள் திரையிடப்படும்.

ஆனால், இத்தகைய  திரைப்பட விழாவுக்கு பொருத்தமற்றதாகவும் வெறுப்புணர்வைத் தூண்டும்  ஒரு பிரச்சார, படமாகவும்தான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த மார்ச் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் படத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் காணப்பட்டது.

1990ம் ஆண்டு வாக்கில் காஷ்மீரில் பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறிய சம்பவங்கள் காட்சிகளாக திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இதனால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியது குறிப்பிடத் தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com