தூக்கு தண்டனை தருவதில் நம்பர் ஒன் மாநிலம், குஜராத்!

தூக்கு தண்டனை தருவதில் நம்பர் ஒன் மாநிலம், குஜராத்!

2022 இறுதியில் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 539 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த நேஷனல் லா யூனிவர்சிட்டி எடுத்த ஆய்வறிக்கையில் மரண தண்டனை கைதிகள் பற்றிய விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியா முழுவதும் உள்ள மரண தண்டனை கைதிகள் பற்றிய கணக்கெடுப்பை ஆண்டுதோறும், நேஷனல் லா யூனிவர்சிட்டி மேற்கொண்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக எடுத்து வந்த கணக்கெடுப்பில் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக சரிந்து கொண்டே வந்திருக்கிறது.

2016க்கு பின்னர் 2022ல் தான் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. சென்ற ஆண்டு 165 பேருக்கு மரண தண்டனை தரப்பட்டதால் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

சென்ற ஆண்டில்தான் அதிகபட்சமாக நிறைய பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் சென்ற ஆண்டுதான் அதிகமான மரண தண்டனை கைதிகள் தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

2008ல் நடந்த அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் 56 பேர் கொல்லப்பட்டார்கள். 200 பேர் பலியானார்கள். வழக்கு விசாரணையின் முடிவில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இது மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் 51 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத்தை தொடர்ந்து உத்திரப் பிரதேசம் மற்றும் ஜார்ககண்ட் மாநிலங்களிலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் அதிகரித்திருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் மரண தண்டனை கைதிகள் கருணை மனுவை சமர்ப்பிப்பார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படும்போது எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

நாடு முழுவதும் மரண தண்டனை கைதிகள் அதிகரிப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை மனநல மருத்துவர்களும், நிபுணர்களும் சந்தித்து, அவர்களிடம் பேசி குற்றப் பின்னணி, வாழ்க்கைச் சூழல், இளமைக்கால அனுபவங்கள், குற்றம் நடந்தபோது அவர்களுடைய மனநிலை அதன் பின்னணியில் உள்ள சமூக காரணிகள், தற்போதைய மனநிலை ஆகியவை குறித்து விரிவான ஆய்வுகள் நடத்த வேண்டியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com