பருத்தி உற்பத்தியில் இந்தியாதான் டாப், ஒரு கோடி டன் ஏற்றுமதி செய்து ரெக்கார்ட் பிரேக்!

பருத்தி உற்பத்தியில் இந்தியாதான் டாப், ஒரு கோடி டன் ஏற்றுமதி செய்து ரெக்கார்ட் பிரேக்!

உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா எப்போதும் டாப் 5 இடத்திற்கு வந்துவிடும். சீனா எப்போதும் முதலிடத்தில் இருக்கும். ஆனால், முதல் முறையாக சீனாவை பின்னுக்கு தள்ளி ஒரு கோடி டன் இலக்கை இந்தியா சர்வசாதாரணமாக கடந்திருக்கிறது.

நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 80 சதவீதம் பருத்தியை சார்ந்துள்ளது. கொரானாவுக்கு பிந்தைய சூழல், உக்ரைனில் தொடரும் போர் போன்றவற்றினால் பருத்தி உற்பத்தி விஷயத்தில் இந்தியாவுக்கு சாதகமான நிலை இருப்பதாக மில்ஸ் அசோஷியன் தெரிவிக்கிறது. கொரானாவுக்கு முன்னர் பருத்தி உற்பத்தி 10 முதல் 20 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்து வந்திருக்கிறது.

நடப்பாண்டில் 200 சதவீதம் உயர்ந்து, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி ஒரு கோடி டன்னை தாண்டியிருக்கிறது. கொரானா காலத்திற்கு பின்பு இதுவொரு விஸ்வரூப வளர்ச்சி. நடப்பாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி உலக சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, மற்றும் சீனாவில் பருத்தி உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவது, இந்தியாவுக்கு சாதகமான சூழலை உருவாக்கி தந்திருக்கிறது. உலக அளவில் பருத்தி உற்பத்தியை கணிக்கும் நிறுவனங்கள், இந்தியாவால் 700 லட்சம் டன் பருத்தியை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று கணித்திருந்தன.

சென்ற ஆண்டு பட்ஜெட்டில் பருத்தி ரகங்களுக்கு புதிதாக பத்து சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமங்களை சந்தித்து வரும் ஜவுளித்துறைக்கு இது பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதுவரை பருத்தி மற்றும் கழிவு பஞ்சுக்கு இறக்குமதிவரி எதுவும் விதிக்கப்படாத நிலையில், 5 சதவீத வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக 5 சதவீத வரி என மொத்தம் 10 சதவீத வரிவிதிப்பை அறிவித்தது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

நாட்டின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் அளவிலான பருத்தி மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பருத்தி வகை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்று விளக்கமும் தரப்பட்டது.

புதிய இறக்குமதி வரியால் பாதிப்பில்லை. ஏற்றுமதி தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவுக்கு நல்ல வருவாயை ஈட்டி தருகிறது. ஆனால், உள்நாட்டில் பருத்தி ஆடைகளின் விலையில் எந்த மாற்றமுமில்லை. பருத்தி ஜவுளி பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி வரி உள்ளதால் உற்பத்தி செலவு அதிகரிப்பால் இனி விலை குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள்.

இனி பருத்தி ஆடை உள்ளூரில் காஸ்ட்லிதான்.ஆனால், வெளிநாட்டில் பருத்தியை விற்று, பணமாக்கிவிட்டு சீனாவிலிருந்து வரும் மலிவான துணிகளை வாங்கிக்கொள்ளவேண்டியதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com