13,000 வேலை வாய்ப்புகளை வழங்கும் ஜம்மு காஷ்மீரின் முதல் சர்வதேச மால்!

13,000 வேலை வாய்ப்புகளை வழங்கும் ஜம்மு காஷ்மீரின் முதல் சர்வதேச மால்!

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் முதல் சர்வதேச வணிக வளாகத்திற்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்த மால் யூனியன் பிரதேசத்தில் மிகப்பெரிய வணிக வளாகமாக கட்டமைக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மால் கட்டுமானத்தை ஸ்ரீநகரில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட எமார் குழு ஏற்றிருக்கிறது.

250 கோடி ரூபாய் மதிப்பில், 10 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஸ்ரீநகரில் உள்ள செம்போரா பகுதியில் 2026-ம் ஆண்டுக்குள் இந்த மால் அமைக்கப்படும். இதில் 500 கடைகள் அமைக்கப்பட உள்ளதால், இந்த மால் கிட்டத்தட்ட 13000 இளைஞர்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெகா மாலில் ஒரு மால், ஆறு மல்டிபிளக்ஸ்கள், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் பல பயன்பாட்டு வணிக மற்றும் குடியிருப்பு வளாகம் ஆகியவை அடங்கும். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் இது முதல் குறிப்பிடத்தக்க அந்நிய நேரடி முதலீடு ஆகும்.

“ஜம்மு காஷ்மீருக்கு இன்று ஒரு வரலாற்று நாள், மெகா மாலின் அடித்தளம் அமைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் பெருமையான தருணம்” என்று லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா மால் அடிக்கல் நாட்டுவதற்கு முன் கூறினார்.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் ஐடி டவர்களை அமைப்பதில் எமார் குழுமம் முதலீடு செய்யும் என்றார். "ஜம்மு காஷ்மீரில் குழுமத்தின் மொத்த முதலீடு 500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது". யூனியன் பிரதேசத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வணிக சூழலை வழங்க J&K அரசாங்கம் செயல்பட்டு வருவதாக லெப்டினன்ட் கவர்னர் கூறினார்.

முதலீட்டாளர்களுக்கு சிறந்த சூழலை உறுதி செய்துள்ளோம். புதிய தொழில்துறை திட்டம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகிறது. ஜம்மு காஷ்மீர் முதலீட்டாளர்களுக்கு வழங்குவது போல் நாட்டின் எந்த மாநிலமும் சலுகைகளை வழங்குவதில்லை. தவிர, மின் கட்டணமும் இங்கு மலிவாக உள்ளது,'' என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 5, 2019 அன்று 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததைக் குறிப்பிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சின்ஹா கூறினார். "சட்டத்தின் ஆட்சி திரும்பியது மட்டுமல்லாமல், நாங்கள் தனியார் முதலீட்டையும் பெறுகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த 22 மாதங்களில் 5000 தேசிய முதலீட்டாளர்கள் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். “ஒவ்வொரு நாளும் எட்டு புதிய முதலீட்டாளர்கள் பதிவு செய்யப்படுகிறார்கள். கடந்த மாதம் 45 தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தெலுங்கானாவுக்குப் பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீர் பெண்களுக்குச் சொந்தமான தொழிற்பேட்டையைக் கொண்ட நாட்டிலேயே இரண்டாவது பிராந்தியமாகும், இது பெண் தொழில்முனைவோருக்காக பிரத்யேகமாக உதம்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

"இங்கே நிறைய சாத்தியங்கள் உள்ளன. மக்கள் இங்கு வந்து முதலீடு செய்ய வேண்டும், ”என்று சின்ஹா கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com