செஸ் ஒலிம்பியாட்: வென்ற 2 இந்திய அணிக்கு தலா ரூ 1 கோடி பரிசு!

செஸ் ஒலிம்பியாட்: வென்ற 2 இந்திய அணிக்கு தலா ரூ 1 கோடி பரிசு!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்தியாவின் இரண்டு அணிகளுக்கு, தமிழக அரசு சார்பில் தலா ரூ.1 கோடி பரிசளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

-இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: 

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்  விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.

இப்போட்டிகளின்  பொதுப் பிரிவில் 'இந்திய பி அணியும்' பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த இரண்டு அணிகளில் இடம்பெற்ற செல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு  தலா ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கி தமிழக அரசு சிறப்பிக்கும்.  

– இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com