டெல்லி சட்டமன்றம்; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தர்ணா!

டெல்லி சட்டமன்றம்; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தர்ணா!

டெல்லியில் கடந்த 2016-ம் ஆண்டு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவராக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பதவி வகித்தபோது ரூ.1,400 கோடி மதிப்பில் ஊழல் செய்ததாக ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி, நேற்றிரவு டெல்லி சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேசமயத்தில் டெல்லி துணை  முதல்வர் மணீஷ் சிசோடியாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மகாத்மா காந்தி சிலை அருகே அமர்ந்த நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாடல்கள் பாடியும், முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் இருந்தனர். இரவு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com