விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டாரா? பஞ்சாப் முதல்வர் !

விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டாரா? பஞ்சாப் முதல்வர் !

பஞ்சாப் முதல்வரும்  ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான பகவந்த் மான் விமானத்திலிருந்து நேற்று இறக்கிவிடபட்டுள்ள செய்தி சர்ச்சையை கிளப்பி உள்ளது. நேற்று ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரிலிருந்து புதுடில்லி வந்து சேரும் லுப்தான்சா விமானத்தில் பகவந்த்மான் பயணம் செய்தார். அப்போது அவர் நிற்கவே இயலாத குடிபோதையில் இருந்தார். விமான பயண விதிகளின் படி அவர் விமானத்தில் பயணிக்க விதிமுறைகள் அனுமதிக்காததால் அவர் அங்கிருந்து கீழே இறக்கவிடப்பட்டுள்ளார்.

இச்செய்தி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியினருக்கும் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவர் முதல்வர் பதவியில் நீட்டிக்க சிக்கல் ஏதுமில்லை என ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இச்செய்தி குறித்து எதிர்கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது அவமானகரமானது என கருத்து தெரிவித்துள்ளனர். 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com