பழைய வண்டி வைச்சுருக்கீங்களா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க...!

பழமையான வாகன அழிப்புக் கொள்கை!
பழைய வண்டி வைச்சுருக்கீங்களா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க...!

அரசுப் பேருந்துகள் உள்பட 9 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் பொதுப் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டு, அவற்றுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்காக பழமையான வாகன அழிப்புக் கொள்கையை பிரதமர் மோடி கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்று மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார். இதனால், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான வாகனங்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து பயன்படுத்தப்படாது.

2070-ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் கார்பன் வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை எட்டுவதை இலக்காகக் கொண்டு, திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்காக பழமையான வாகன அழிப்புக் கொள்கையை பிரதமர் மோடி கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும். புதிய வாகனங்கள் வாங்கப்படும் என தெரிவித்துள்ள அவர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எத்தனால், மெத்தனால் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிவித்துள்ளார்.

தாமாக முன் வந்து பழைய (20 ஆண்டுகள் பழைய தனி நபர் மற்றும் 15 ஆண்டுகள் பழைய வர்த்தக) வாகனங்களை அழிப்போருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். காற்று மாசை ஏற்படுத்தும் வாகனங்களை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் இப்புதிய கொள்கை கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com