இந்தி மொழிக்கு தாய்ப்பால் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலா? ஸ்டாலின் அறிக்கை !

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு கடந்த மாதம் அளித்துள்ள அறிக்கையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்றவற்றிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இது தொடர்பான பல்வேறு விஷயங்கள் இந்த பரிந்துரையில் உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றினை நேற்று வெளியிட்டிருந்தார். இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்தி மொழிக்கு தாய்ப்பாலா? மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலா? என காட்டமாக விமர்சித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு ‘ஒரே நாடு’ என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும் என குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் தவிர்த்து இந்தியாவின் ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர் தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று திரு.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com