கர்நாடகாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

கர்நாடகா மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். அங்கு விவசாயிகளுக்கான ரூ.2,000 கிசான் நிதி வழங்கப்பட உள்ளது. முதலில் பிரதமர் மோடி சிவமோகா விமான நிலையத்தை ஆய்வு செய்கிறார். அதன் பிறகு, அவர் சிவமோகாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பெலகாவியில் பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பெலகாவி செல்லும் பிரதமர், விவசாயிகள் நலநிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 13வது தவணை நிதியை விடுவிக்கிறார். 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 16 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து பெலகாவி ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை பிரதமர் திறந்து வைக்கிறார். சிவமோகா செல்லும் பிரதமர், அங்கு 450 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடம் ஒரு மணி நேரத்திற்கு 300 பயணிகளைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் சிவமொக்கா, மல்நாடு பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும்.

சிவமோகாவில் இரண்டு ரயில்வேத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதில் சிவமோகா - ஷிகாரிபுரா - ரானேபென்னூர் புதிய ரயில் பாதை மற்றும் கோட்டகங்குரு ரயில்வே பெட்டி பணிமனை (கோச்சிங் டிப்போ) ஆகியவை அடங்கும். சிவமோகா - ஷிகாரிபுரா - ரானேபென்னூர் புதிய ரயில் பாதை, ரூ. 990 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு, பெங்களூரு-மும்பை பிரதான வழித்தடத்துடன் மல்நாடு பகுதியை இணைக்கும். சிவமொக்கா நகரில் இருந்து புதிய ரயில்களை இயக்கவும், பெங்களூரு மற்றும் மைசூருவில் பராமரிப்பணிகளின் நெருக்கடியைக் குறைக்கவும் ரூ. 100 கோடி செலவில் கோட்டாங்குரு ரயில்வே கோச்சிங் டிப்போ உருவாக்கப்படும்.

ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ், 128 கிராமங்களுக்கான பலவகை கிராமங்கள் திட்டத்தை தொடங்கிவைக்கும் பிரதமர், மேலும் 3 கிராமங்களை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிவைக்கிறார். இதேபோல, 44 ஸ்மார்ட்சிட்டி திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com